லாஹூர்: எதிர்வரும் 2015ல் நடைபெறப் போகும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது பாகிஸ்தான் அணிக்குத் தலைவராக மிஸ்பா உல் ஹக் நீடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் உலகக் கோப்பைத் தொடருக்கு பாகிஸ்தான் அணித்தலைவர் யார் என்ற குழப்பம் தீர்ந்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு வேறு யாராவது தலைவராக நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டது.
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மொயின் கானும் கூட அப்படியேதான் பேசி வந்தார். ஆனால் மிஸ்பாவே தலைவராக நீடிப்பார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொயின் கான், அதிரடி வீரர் ஷஹித் அப்ரிடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். ஆனால் அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை.
மேலும் மிஸ்பாவை விரும்பாத சில வீரர்கள் அவரைத் தூக்க கடுமையாகவும் முயன்றனர். மொயின் கான் மூலமாக முயற்சித்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தியின் ஆதரவு அவருக்குக் கிடைத்ததால் மிஸ்பா தப்பியுள்ளார்.
இதுகுறித்து நஜம் சேத்தி கூறுகையில் அணித்தலைவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே சொன்னது போல மிஸ்பாவே உலகக் கிண்ணத் தொடருக்கும் தலைவராக நீடிப்பார்.
தலைவரை நியமிப்பதும் நீக்குவதும் வாரியத் தலைவரின் உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தேசிய அளவிலான அணிகளைத் தேர்வு செய்வதோடு தேர்வாளர்களின் வேலை முடிந்து விடும் என்றார் சேத்தி.
Published by

Leave a comment