ஹீத்ரோ: லண்டன் ஹீத்ரோ, லண்டன் கெட்விக், ஸ்டேன்ஸ்டெட் மற்றும் பெர்மினம் ஆகிய நான்கு விமான நிலையங்களின் குடிவரவு (Immigration) திணைக்களத்தின் கணனிகள் திடீரென செயலிழந்ததால் ஐக்கிய இராச்சிய குடிவரவுத் திணைக்களம் பாரிய சிக்கல்களை குறித்த விமான நிலையங்களில் எதிர்கொண்டு வருகின்றன.
பயணிகளால் நிரம்பிவழியும் லண்டன் ஹீத்ரோவில் பயணிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலதிக குடிவரவு திணைக்கள உத்தியோகத்தர்கள் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கணனிகளின் தொழிநுட்ப கோளாருகளே மேற்படி சம்வத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது. பயணிகளை நாட்டிற்குள் பிரவேசிக்க விசேட தற்காலின செயன்முறையை ஐக்கிய இராச்சியக் குடிவரவு அதிகாரிகள் தற்பொழுது மேற்கொண்டு வருவதாக லண்டன் ஹீத்ரோ குடிவரவு அதிகாரி சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
Published by


Leave a comment