இரானுவ கெப் வண்டி மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் 7 பேர் காயம்

accident-sign– இர்ஷாத் றஹ்மத்துல்லா

புத்தளம்: இரானுவ கெப் வண்டி மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில்கா 7 யங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (30) அதிகாலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

புத்தளம் அநுராதபுரம் வீதியில் 12 அம் கட்டைக்கருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக கருவலகஸ்வெவ பொலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது காயமுற்றவர்களில் 5 பேர் இரானுவ சிப்பாய்களும்இஏனைய இருவர் மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என புத்தளம் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இரானுவ சிப்பாய்கள் பயணித்த கெப் வாகனம் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது.அதே போல் மொரட்டுவ பிரதேச பயணிகள் பயணித்த வேன் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை வேனின் சாரதிக்கு எற்பட்ட துாக்கத்தினால் இந்த விபத்து எற்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலீஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இரு வாகனங்களுக்கும் கடும் சேதம் எற்பட்டுள்தாக தெரிவித்த பொலீஸார் விசாரணைகள் இடம் பெறுவதாகவும் கூறினர்.

Published by

Leave a comment