நியுயோர்க்: அமெரிக்காவைச் சேர்ந்த செஸ்னா ரக விமானம் ஒன்று இன்னொரு விமானத்துடன் நடு வானில் மோதி கலிபோர்னியா வளைகுடா கடலில் விழுந்தது. சான்பாப்லோ பகுதிக்கு அருகே இந்த விபத்து நடந்தது. செஸ்னா விமானம், ஹக்கர் சீ பரி டிஎம்கே 20 ரக விமானத்துடன் மோதியது. அதேசமயம், ஹக்கர் சீ விமானம் பத்திரமாக தரையிறங்கி விட்டது.
ஆனால் செஸ்னா விமானம்தான் கடலில் விழுந்து விட்டது. சான்பாப்லோ கடல் பகுதியில் விழுந்து செஸ்னா விமானத்தின் சிதறல்கள் கடலில் மிதந்தன. அதன் விமானியைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர். இரு விமானங்களுமே ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்டவையாகும். விபத்தின்போது இரு விமானங்களிலும் தலா ஒருவரே இருந்துள்ளார். அதாவது பைலட்கள் மட்டுமே விமானத்தில் இருந்துள்ளனர்.
சான்பிரான்சிஸ்கோவிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள ஹாப் மூன் பே விமான நிலையத்திலிருந்து இரு விமானங்களுமே புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(காப்பகப் படம்)
Published by

Leave a comment