‘உலகிலேயே வயதான ஆண்’ என்ற கிண்ணஸ் சாதனைக்குரியவர் மரணம்

Arturo-Licata– SHM

ரோம்: இத்தாலி நாட்டை சேர்ந்த மிகவும் வயதான மனிதர் என்ற பெருமை பெற்ற அர்த்ரோ லிட்டிகோ இன்று மரணமடைந்தார். உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அவருக்கு வயது 111.  1902ம் ஆண்டு மே 2ம் தேதி இத்தாலியில் பிறந்தார் அர்த்ரோ லிட்டிகோ. 19 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார்.

1939ல் ராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து வணிகத்தில் தனது வாழ்க்கையை நடத்தினார். உலகிலேயே வயதான ஆண் என்ற சிறப்பை கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்ததன் மூலம் பெற்றார் அர்த்ரோ.

ரைட் சகோதர்கள் காலத்தில் பிறந்த இவர் கடந்த ஏப்ரல் 24 தேதி அன்று மரணம் அடைந்தார். அடுத்த மாதம் மே மாதம் வந்தால் இவருடைய வயது 112 ஆக இருக்கும் என்று உலக கின்னஸ் புத்தகத்தின் தலைமை ஆசிரியர் கிரேக் க்ளெண்டே தெரிவித்துள்ளார்.

Arturo-Licata

Arturo-Licata-1

Published by

Leave a comment