மண்முனை: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பொது மக்களின் சுற்றுலா தளமாக மண்முனை பாலமும் கொக்கட்டிச்சோலை பிரதேசமும் மாறிவருகின்றது.
பாலம் இல்லாமல் பல்லாண்டு காலமாக விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கில் படுவான்கரையயும் -எழுவான்கரையையும் இணைக்கும் புதிய மண்முனை பாலத்தை பார்வையிட தினமும் பெரும் திரளான தமிழ்,முஸ்லிம் மக்கள் வருகை தருவதோடு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தையும் பார்வையிட்டு வருகின்றனர்.
இப் பாலத்தை பார்வையிட வரும் பொது மக்கள் தங்களின் பொழுது போக்கு தளமாகவும் இதனை கருதுகின்றனர்.
இதனால் ஐஸ் பழங்கள் மற்றும் சிற்றுண்டி உணவுகள்,விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி வியாபாரிகள் பெரிதும் நன்மையடைகின்றனர்.பாலம் திறந்து வைக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் பாலத்தை பார்வையிட ஆண்கள்,பெண்கள், இளைஞர்,யுவதிகள்,சிறுவர் ,சிறுமிகள்,முதியவர்கள்,வயோதிபர்கள் என பலரும் வருகை தந்த வன்னம் உள்ளனர்.
Published by

Leave a comment