யூதப் படுகொலை உலகின் மிகக் கொடூரமானது’ – அப்பாஸ்

7770349480222abbas[1]காஸா: நவீன வரலாற்றில் மனிதகுலத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட மிகக் கொடூரமான குற்றமாக ”கோலோகோஸ்ட்” யூத இனப்படுகொலையை பாலத்தீன அதிபர் மஃமுட் அப்பாஸ் வர்ணித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த நிகழ்வுகளை இஸ்ரேல் அனுட்டிப்பதற்கு சற்று முன்னதாக அப்பாஸ் அவர்களின் இந்த அபூர்வமான அங்கீகாரம் வந்துள்ளது.

இஸ்ரேலால் கடந்த வாரம் கைவிடப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர, தான் ஆர்வமாக இருப்பதாகவும் அப்பாஸ் அவர்கள் மீண்டும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலாக கருத்துரைத்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள், இஸ்லாமியக் குழுவான ஹமாஸுடனான ஒத்துழைப்பை கைவிடுமாறு அப்பாஸை கோரியுள்ளார்.

ஹமாஸுடனான அப்பாஸின் ஒத்துழைப்பு இஸ்ரேலிய தேசத்தை அழித்து, இன்னுமொரு யூத இனப்படுகொலைக்கு வழி செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

 – BBC

Published by

Leave a comment