‘பொதுபல சேனாவுக்கு நான் ஒருபோதும் பயப்பட போவதில்லை’-பசில் ராஜபக்ஷ

bazilகொழும்பு: பொதுபல சேனாவுக்கு நான் ஒருபோதும் பயப்பட போவதில்லை. கடந்த யுத்த காலத்தில் வடக்கிலிருந்து அகதியாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கு உரிய அரச காணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அதனை துண்டு களாக வழங்கி மீளக்குடியமர்த்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உண்டு என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார்.

கடந்த கால கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம், தமிழ் சகல மக்களையும் அவர்களுக்கு உரிய காணிகளை அடையாளம் கண்டு மீள குடியமர்த்தப்படுவர். இம் மக்கள் எமது நாட்டின் பிரஜைகள். இதற்கு முன்னரும் காணிகள் வழங்கப் பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தியுள்ளேன்.

இந்த மக்கள் வாழ்ந்த சொந்தக் காணிகளில் இராணு வத்தினர் முகாமிட்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்புக் கடமைக்காக இக் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. பொது பலசேனா சொல்வது போன்று ஏற்கனவே வாழ்கின்ற மக்களை அகற்றுமாறு சொல்வதற்கு அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என காணிகளை அடையாளம் கண்டு மீள குடியமர்த்தப்படுவர். இம் மக்கள் எமது நாட்டின் பிரஜைகள். இதற்கு முன்னரும் காணிகள் வழங்கப் பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தியுள்ளேன்.

இந்த மக்கள் வாழ்ந்த சொந்தக் காணிகளில் இராணு வத்தினர் முகாமிட்டுள்ளனர்.

இவர்களின் பாதுகாப்புக் கடமைக்காக இக் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. பொது பலசேனா சொல்வது போன்று ஏற்கனவே வாழ்கின்ற மக்களை அகற்றுமாறு சொல்வதற்கு அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என அமைச்சர் பசில் பதிலளித்தார்.

இதேவேளை யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து வெளியேறிய தமிழ் மக்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுவிட்டனர். அதேபோன்று அங்கு வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கு எவரும் இடையூறாக இருக்கக் கூடாது எனவும் அமைச்சர் பசில் தெரிவித்தார்.tk

Published by

Leave a comment