வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டதன் அடிப்படையில் இலங்கை சமுர்த்தி அதிகார சபை இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் ஊழியர்களுக்கு பின்வரும் பிரேரணையின் மூலம் தமது விருப்பத்தின் பிரகாரம் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தில் இணைந்துகொள்ள மற்றும் விலகிக்கொள்ள சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.
01 சுய விருப்பத்தின் பிரகாரம் கடமையிலிருந்து விலகிக்கொள்ளல்.
02 ஆரம்ப சேவைக்காலத்துடனான ஓய்வூதியம் பெறும் ஊழியர் ஒருவராகுதல்.
03 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் தாபிக்கப்பட்ட தினத்திலிருந்து ஓய்வூதியத்துடனான ஊழியர் ஒருவராகுதல்.
04 தொடர்ந்தும் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின்பங்களிப்பின் கீழ் ஓய்வூதியம் பெறாத ஊழியர் ஒருவராகுதல்.
01. சுய விருப்பத்தின் பிரகாரம் கடமையிலிருந்து விலகிக்கொள்ளல்
இதுவரையிலும் கடமையாற்றிய மேற்படி அதிகார சபை உத்தியோகத்தர்கள் தமக்கு உத்தியோகத்திலிருது நிரந்தரமாக விலகிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த சகையில் முன்னைய சேவை ஒவ்வொரு12 மாத சேவைக்காலத்திற்கும் இரு மாத சம்பளம் வீதம் வழங்கப்படுவதோடு தனது வயதிலிருந்து 55 வயது வரையிலுமுள்ள பிற்பட்ட காலத்திற்கு ஒவ்வொரு12 மாத சேவைக்காலத்திற்கும் 01 மாத சம்பளம் வழங்கப்படும் அத்துடன் அவருக்கரித்தான ஈ பி.எப் ஈடிஎப் மற்றும் பணிக்கொடையும் வழங்கப்படும்.
02. ஆரம்ப சேவைக்காலத்துடனான ஓய்வூதியம் பெறும் ஊழியர் ஒருவராகுதல்
தொடர்ந்து இச்சேவையிலேயே இருக்க விரும்பின் சேவைக்காலத்துடன் ஓய்வுதியமும் கிடைக்கவுள்ளது அத்துடன் இவரினால் கிடைத்த ஈபிஎப் ஈடிஎப் தொகையில் 60% கழித்தது 40ம வழங்கப்படுவதோடு இந்த 40% இல் விதவைகள் அநாதைகள் தபுதாரர்கள் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பச் செலுத்த வேண்டும்.
03. வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் தாபிக்கப்பட்ட தினத்திலிருந்து ஓய்வூதியத்துடனான ஊழியர் ஒருவராகுதல்
ஒரு ஊழியர் தாம் உழைத்தப்பெற்றுக்கொண்ட ஈபிஎப் ஈடிஎப் இனைப்பெற்றுக்கொண்டு புதிதாக ஓய்வூதியத்திட்டத்தினுள் இணைந்துகொள்ள முடியும் இந்தவகையில் இவரின் சம்பளம் ஆரம்ப அடிப்படைச்சம்பளத்திற்கு அமர்த்தப்படுவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இவர் பணிக்கொடையினையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
04. தொடர்ந்தும் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின்பங்களிப்பின் கீழ் ஓய்வூதியம் பெறாத ஊழியர் ஒருவராகுதல்.
இச்சேவையிலேயே தொடர்ந்தும் ஈபிஎப் ஈடிஎப் இனைப்பெற்றுக்கொண்டு 55 வயதுவரை இருக்க முடியும் ஆனால் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உரித்தாகமாட்டார்.
மேற்படி பிரேரணைகளின் அடிப்படையில் ஊழியர் ஒருவர் தமது விருப்பத்தினை எதிர்வரும் 16 மே 2014 ம்திகதிக்கு முன்னர் தெரிவிக்க முடியும் என இச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by

Leave a comment