வீர முஸ்லிமுக்கு புறமுதுகு எதற்கு…?

camel– முஜாஹித்

கூகிலுக்கு
பிரிஸ்டல் போர்ட் பிடித்து
வேகா வெயிலில்
ஓர் கண்டனம்
கண்டதுதான் என்னவோ?

பலஸ்தீனுக்கும்
எகிப்துக்கும்
ஆதரவுப் போராட்டம்

அமெரிக்காவுக்கும்
இஸ்ரேலுக்கும்
எதிர்ப்புப் போராட்டம்

எங்களை யாரும்
அன்றும் இன்றும்
கண்டதில்லை.

கிரிக்கட்டுக்கு மட்டும்
சிரிக்கும்படி அறிக்கைகள்விட்டு
சின்னப்புள்ளத்தனமாய்
நாட்டுப்பற்றைக் கொச்சைப்படுத்திய
இயக்கங்கள் இன்று எங்கே போயின?

முஸ்லிமின் வீரத்தை
பொறுமை என்றும்
அமைதி என்றும்
அடக்க முற்படும்
இயக்கங்கள்
இறைஇல்லங்கள்
உடைக்கப்படும்போது
தங்கள் வாய்களுக்குப்
பூட்டுப் போட்டது ஏனோ?

உன் மனைவியை
உன் சகோதரனை
ஏன்..
உன் பிள்ளையை கொச்சைப்படுத்தும்
ஒருவனை
உன்னால்
பொறுமைகொண்டு
இருக்க முடியுமா?

வருடங்கள்
இரண்டைத்தாண்டி
கொடிகட்டிப்பறக்கிறது
பொதுபல சேனாவின்
காடைத்தனம்

அன்று ஒரு பள்ளி
இன்று 17 பள்ளிகள்
நாளை…..?

முஸ்லிம் ஊரென்று
மிம்பர்களில் அறியாமையால்
புகழ்ந்து தள்ளும்
மார்க்க அறிஞர்களின்
அறிவுக்கு
நீதி, நியாயம், தியாகம்
இன்னும் எட்டாதது ஏனோ?

போராடு வீர முஸ்லிமே
உறங்காமல் விரண்டெழு!
இது என் மார்க்கமோ
உன் மார்க்கமோ அல்ல
அல்லாஹ்வின் பாதை
நபிகளாரின் தியாக வழி!

அறிஞர்களும்
அரசியல்வாதிகளும்
தூங்குகிறார்கள்…
வாய்பேச
கையசைய
உத்தரவு
வேண்டும் இந்த
முஸ்லிம் ஊரில்!

எல்லாவற்றுக்கும் முன்மாதிரி…
அதுதான்….
அல்லாஹ்வின் இல்லங்கள்
உடைத்தெறியப்படும் போதும்
குர்ஆன் விமர்சிக்கப்படும் போதும்
கோளைகள் நாங்கள் என்பது
உலகறிந்த விடயம்!

புறமுதுகு காட்டி
தப்பிக்கொள்ளும்
கண்டிக்க வக்கில்லா இயக்கங்கள்
இன்றைய

தந்திர ஆட்சியில்
மந்திரமாக முடக்கப்பட்டிருக்கின்றன.

காத்திருங்கள்
நோன்பு வருகிறது
உடைத்த பள்ளிக்கும்
பேரீச்சம்பழம்
தருவார்கள்
உலகுக்கும் காண்பிப்பார்கள்

தியாக வழி வந்த
முஸ்லிமுக்கு
பொறுமையும் தெரியும்
போராடவும் தெரியும்
உணர்த்த வேண்டும்
இல்லையேல்….
உணர வேண்டும்… அவர்கள்!

 

 

 

Published by

Leave a comment