கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் இன்று வன்முறைக் குழுக்களின் ஆட்சி இடம் பெறுவதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
ராஜபக்சவின் நாடாக கருததப்படும் ஹம்பாந்தோட்டைக்கு வேறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் செல்லமுடியாத சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் ஹம்பாந்தோட்டை, கொழும்பு நகருக்கு நிகராக அபிவிருத்தி செய்யப்படுகிறது.
அங்கு விமான நிலையம், துறைமுகம், சர்வதேச விளையாட்டு மைதானம் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அங்கு அரசாங்கத்தின் சார்பில் வன்முறைக்குழுக்கள் செயற்படுகின்றன. இந்தக்குழுக்களே அண்மைக்காலமாக அரசாங்கத்தின் சார்பில் அங்கு செயற்பட்டு வருகின்றன.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, தென்பகுதியில் கூட்டங்களை நடத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினார். அதேபோல அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக், மஹிந்த ராஜபக்சவின் ஊரில் வைத்தே கொலை செய்யப்பட்டார். இவையாவும் அங்கு வன்முறைக் குழுக்களின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுக்கின்றன.
இந்தநிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வன்முறைக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிராக பொதுபலசேனா உட்பட்ட பௌத்த துறவிகள் செயற்படுகின்றனர்.
எனவே நாட்டில் தற்போது வன்முறை கலாசாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டுமானால் அது ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.tw
![Buddhist-monks-destroy-Muslim-shrine-in-Sri-Lanka[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/buddhist-monks-destroy-muslim-shrine-in-sri-lanka1.jpg?w=150&h=100)
Leave a comment