வில்பத்து குடியேற்றம் தொடர்பில் நீதிமன்ற ஆணையினை ஏற்றுக் கொண்டு செயற்படுகிறோம் – அமைச்சர் றிசாத் பதியுதீன்

unnamed (6)இர்ஷாத் றஹ்மத்துல்லா

வில்பத்து: பல்வேறு அமைப்புக்கள் குறிப்பிடுவது போன்று வில்பத்து தேசிய வனப்பகுதியில் பலவந்தமாக குடியேறியுள்ளார்கள் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆணையினை ஏற்றுக் கொண்டு அதற்கு மட்டும் மதிப்பளித்து செயற்படுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வில்பத்து தேசிய வனப்பகுதியினை துப்பரவு செய்து அந்த வில்பத்து காடடுப்பகுதியினை அழிப்பதாக பொதுபலசேனா அமைப்ப உள்ளிட்ட பல சுற்றாடல் அமைப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. தற்போதுள்ள நிலையினை தெளிவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர்கள் சகிதம் நேற்று 22 ஆம் திகதி வில்பத்து – மறிச்சுக்கட்டி ( மரைக்கார் தீவு) பிரதேசத்துக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் இங்கு கருத்துரைக்கையில், உண்மையில் சொல்லப் போனால் தற்போது இங்கு குடியேறியுள்ளவர்கள் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான். சிலர் என்னிடம் கேட்கின்றார்கள் ஏன் இங்கு சிங்கள மற்றும் தமிழ் மக்கள் குடியேறவில்லை என்று, 1990 க்கும் முன்பு இங்கு சிங்கள, தமிழ் மக்கள் வாழவில்லை. இங்கு வாழ்ந்தவர்கள் முஸ்லிம்கள் மட்டும் தானே. சிலர் கூறுவது போன்று இந்த மக்களின் பிரதி நிதி என்ற வகையில் இந்த குடியேற்றங்களுக்கு பொறுப்பான அமைச்சரிடத்தில் கலந்துரையாடல்களை செய்துள்ளேன். இருந்த போதும் தற்போது இவ்விடயம் நீதிமன்றில் இருப்பதால் அது குறித்து கருத்து கூற முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கின்றேன். அதனை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஊடகவியாளர்களிடத்தில் கூறினார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment