இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாம் தெரிவிக்கும் ஒற்றுமை

muslims1[1]இர்ஷாத் றஹ்மத்துல்லா 

இலங்கை நாட்டிலும், உலகிலும் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராக நாம் தினந்தோறும் இறைவனிடத்தில் அதிலிருந்து எமது மக்களை பாதுகாக்குமாறு பிரார்த்தனைகளை செய்துவருகின்றோம். இதனால் அல்லாஹ் அவனது பாதுகாப்பை எமக்கு வழங்கிவருகின்றான். இதில் கலிமா சொன்ன எந்த ஈமானிய உள்ளத்திற்கும் மறுாபட்ட கருத்திருக்க முடியாது. இதனை நிராகரித்து தமது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு முன்னுரிமையளித்து நாம் செயற்பட முற்படுகின்ற போது அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வானா என்ற கேள்வியினையும் நாம் எழுப்பி அதற்கு பதிலை பெற்றுக் கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தின் கவலைத்தரும் விடயங்களாகும்.

எமது இலங்கை திருநாட்டில் இன்று எற்பட்டுள்ள நிலையினை நாங்கள் அவசரப்படாமல் மிகவும் அவதானமாக புத்தி சாதுாரீயமாக கையாள வேண்டியுள்ளது. குறிப்பாக இன்று எல்லொரும் பேசுகின்ற பொதுபலசேனா போன்று அன்று 1990 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த வடக்கு முஸ்லிம்களும் தமது தாயக மண்ணிலிருந்து வெளியேற்ற சம்பவங்கள் அதன் மூலம் நாங்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்பன ஏராளம். அதனை மறந்து மீண்டும் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு எமது சகோதர முஸ்லிம்கள் எண்ணத்தால் கூட சிந்திப்பது என்பது எந்தளவுக்கு ஆத்மீக ரீதியான பெறுமானத்தை தரும் என்பதை ஒரு முறை நாம் மீட்டிப்பார்க்க வேண்டும்.

பள்ளிவாசல் முதல் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் வரை இன்று முஸ்லிம்களின் தாயக குடியேற்றத்தைக் கூட இனவாதமாக சித்தரித்து அதன் மூலம் இஸ்லாத்தினை அழிக்கும் கயவர்களின் இறைமறுப்பாளர்களின் கூட்டத்தில் நாம் இணைவதா இது கேள்வியாகும். எமது நாட்டு மக்கள் கடந்த 30 வருடகாலமாக காணப்பட்ட பயங்கரவாத சூழ் நிலைக்காரணமாக பட்ட துன்பங்களும், அவலங்களும் ஏராளம். இந்த நிலையில் ஏரேத அல்லாஹ்வின் உதவியால் கிடைக்கப் பெற்ற சமாதான சூழல் மீண்டும் இந்த நாட்டில் மக்கள் இழந்த மண்ணை மீட்க்க கிடைத்து . இந்த மீட்புக்களில் அதிகமாக பலன் அடையக் கூடியவர்கள் வடக்கு முஸ்லிம்கள் என்பது யதார்த்தம். அதனை அனுபவிக்க நாம் என்ன செய்திருக்கின்றோம் என்றால் அதற்கு எத்தனை பேர்களுக்கு பதில் தெரியும் என்பது கேள்விதான். எமது சகோதரர்கள் அவலப்படுகின்ற வேளை நாங்கள் எமது உதவிகளை வழங்கினோம். அது அந்த மக்கள் எங்களுடன் நன்ற் பாராட்ட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காக இருக்க முடியாது அல்லாஹ்வின் திருப்திக்காகத்தான் செய்தோம், அவர்களுடனான எமது உறவுகள் பணத்துக்கும், ஏனைய சில உலக நன்மைகளுக்காக மட்டும் என்பதால் எற்பட்டவைகள் அல்ல அவைகள் ஆத்ம ரீதியானது என்று தான் இருந்தது. என்பது தான் சத்தியமாகும்.

இவ்வாறு இரண்டரக் கலந்து வாழ்ந்த இந்த வடபுல முஸ்லிம்கள் இன்று மற்றுமொரு சவாலுக்கு முகம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.அம்மக்கள் 1990 களில் வாழ்ந்த காணிகள் இன்று கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.அதனை மீட்டெடுத்து அந்த மண்ணில் முஸ்லிம்கள் குடியேற வேண்டும் அதற்காக உதவி செய்ய வேண்டும் என்று அந்த மக்களின் பிரதி நிதிகள் அரசியல் தலைமைகள் முயற்சி செய்கின்ற போது அதற்கு எதிராக இனவாதம் பேசும்இவிதண்டாவாதம் செய்வதும்இஇந்த குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் கடும் போக்கு இறை நிராகரிப்பாளர்களுடன் கைகோர்த்து கலிமா சொன்ன முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படுவது என்பது யதார்த்தமா ? என்றும் மறுமுறை எம்மை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன்னால் அமைச்சர்களான அல்-ஹாஜ்.எஸ்.எஸ்.எம். அபூபக்கர், மர்ஹூம் நுார்தீன் மசூர், றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளையெடுத்து வந்துள்ளனர். குறிப்பாக அமைச்சர் அபூபக்கர் அவர்கள் சமூக சேவைகள் பிரதி அமைச்சராகவும், விஞ்ஞான தொழில் நுட்ப பிரதி அமைச்சராக போது வடக்கில் புலிகளின் ஆட்சியே இருந்தது. ஆனால், வவுனியா நகர பிரதேசம் மட்டும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அங்குள்ள முஸ்லிம்களின் தேவைகளை கவனத்திற் கொண்டு சூடுவேந்தபுளவு, பாவற்குளம், புளித்தறித்த புளியங்குளம் போன்ற கிராமங்களைின் சில புதிய கிராமங்களின் உருவாக்கத்தை செய்து மக்களை மீள்குடியேற்றினார்.

இதே போன்று அமைச்சர் நுார்தீன் மசூரும் செயற்பட்டார்.பின்னர் அரசியலுக்கு வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது பெரும் சுமையாக இருந்த விடயம் யுத்தத்தால் இடம் பெயரந்து வவுனியாவில் வந்தமர்ந்த இலட்டக்கணக்கான தமிழ் மக்களை மீள்குடியுற்றம் செய்ய வேண்டிய பொறுப்பும் அதே போல் முதுாரிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்கள் சொந்த ஊரில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார். அதனை அவர் நேர்மையாக செய்து முடித்தார். அதன் பிற்பாடு அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் தான் வன்னி மாவட்ட மக்களின் பிரதி நிதி என்ற வகையில் வடக்கு மக்களுக்கு தெவையானதை தனது சக்திக்குட்பட்ட முறையில் செய்தார். இவ்வாறு மன்னாரில் இரந்து இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக வாழந்த பிரதேசங்களில் எற்பட்ட சில சந்தேகங்கள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார், தாங்கள் அகிதிகளாக வந்த போது உதவி புரிந்த மக்களுக்கும் தேவையானதை பெற்றுக் கொடுத்தார் அவரால் மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ அபிவிருத்தி திட்டங்கள் சான்றாகவுள்ளது. இருந்த போதும் சில விடயங்கள் தொடர்பில் அரசியல் தலைமைகளுக்கு இடையில் முறுகல் நிலை இருந்தது, அது மக்களுக்கு எதை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றாலும் அது தன்னால் ஊடாக மட்டும் தான் இடம் பெற வேண்டும் என்ற அவர்கள் தரப்பு நியாயங்கள் முன் வைக்கப்ட்டன.ஆத பிழையென்று நாம் விவாதிக்கவில்லை.அவர்களது கொள்கையாகும். அதற்காக ஒரே வீச்சில் நாம் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பது எமது தாழ்மையாக கருத்தாகும்.

இந்த நிலையில் தான் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியமரச் சென்றனர். அங்கு சென்றால் காடுகளாகவும், தமது இருப்பிட அடையாளங்கள் மாற்றப்பட்டும், சில காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக சுவிகரிக்கப்பட்டும் இருந்ததை காணமுடிந்தது. அதே வேளை வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் அதற்கான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்ற வாக்குறுதிகள் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களால் வழங்கப்பட்டது. மக்கள் நம்பினர் மீள்குடியேறினர். ஆனால் அது ஏக காலத்தில் இடம் பெறவில்லை சில அரச அதிகாரிகள் முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அனுகினர். வசதிகளை செய்து கொடுக்க மறுத்தனர். கடும் சட்ட வரையரம்பகளை கிராம அதிகாரி மூலம் ஏற்படுத்தினர். இவ்வாறான இக்கட்டான சூழ் நிலையிலும் பொருமைக் கார்த்த முஸ்லிம்கள் தமது அரசியல் தலைமை தமக்கு உதவி செய்யும் என்று நம்பினார்கள்.அந்த நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் அமைச்சர றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் ஏராளம். மீள்குடியேறும் மக்கள் தமது காணிகளை பெற்றுக் கொள்வதில் சந்தித்த சவால்கள் சொல்ல முடியாது. காணி அமைச்சுக்கும் சுற்றாடல், அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும், ஜனாதிபதி செயலணிக்கும் சென்று வந்த நாட்கள், காலை முதல் மாலை வரை அங்கு தரித்திருந்த மணித்தயாலங்கள் இவைகளை அல்லாஹ் நன்கறிவான். இப்படிப்பட்ட வலிகளும், வேதனைகளும் சிலருக்கு நகைப்பாகத்தான இருந்தது ஏனெினல் அவர்கள் இவ்வறானதொரு துரதிஷ்டான சந்தர்ப்பங்களை சந்தித்திருக்கமாட்டார்கள் என்பது எனது கணிப்பாகும்.

அப்படிப்பட்ட நிலையில் சட்ட ரீதியாக எந்த அத்துமீறல்களும் இல்லாமல் அரச காணிக் கொள்கைக்கமைய மன்னார் மறிச்சுக்கட்டி காணிகள் அம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன. இருந்த போதும் தற்போதைய சில அமைப்புக்களின் அளுத்தம் முழு வில்பத்து காட்டினையும் முஸ்லிம்கள் குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூவி திரிகின்றனர். ஆனால் அமைச்சர் அவர்கள் இந்த காணிகளை சட்ட பூர்வமாக பெற்க் கொடுத்தமைக்கான ஆவணங்கள் எம்மிடம் உள்ளது. அதனைபிரதேச செயலளார் முதல் பிரதேசத்தின் முதன்மை மதகுருக்கல் கூட நன்கு அறிவார்கள். இருந்த போதும் தற்போதைய நாட்டின் யதார்த்த நிலை தொடர்பில் எதையும் பேச முடியாது நிலை எல்லோருக்கும் உள்ளது. அதனை புரிந்தவானக எமது வடக்கு முஸ்லிம்கள் அவர்களது தாயகத்தில் அச்சமற்ற சூழ் நிலையில் வாழ்வதற்கு நாங்கள் எமக்குள் இருக்கும் சில சந்தர்ப்பவாத சிந்தணைகளையும், எதிர்பார்ப்புக்களையும் களைந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் உரிமைகளை இருக்கின்ற அரசிடம் இருந்து இம்மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு விடடக் கொடுப்புக்களை செய்வோம். அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்வானாக, எமக்கு ஒருவர் அநீதி இழைத்த போதும், அவரை திட்டித் தீர்க்காமல் அவருக்காக அவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரும் கரம் எந்தி பிரார்த்திப்போம். இதுவே இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாம் தெரிவிக்கும் ஒற்றுமையாகும்.

Published by

Leave a comment