5 மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம்: பாதிக்கப்பட்ட மாணவிகள் வைத்தியசாலையில்

child abuseதிருக்கோவில்: அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்கும் ஐந்து மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இது தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணை நேற்று 22ம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட

சிறுமிகளை திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் தொடர்பாக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் தரம் 5ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 11 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த 5 சிறுமிகளை கடந்த சில மாதங்களாக பாடசாலையில் கற்பித்துவரும் தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக சில சிறுமிகள் பெற்றோரிடம் முறைப்பாடு தெரிவித்த போது பெற்றோர் குறித்த ஆசிரியரை இடமாற்றி தருமாறு கோரியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4ம் திகதி அந்த பிரதேசத்தில் வேலைபார்க்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கு இது தெரியவந்ததையடுத்து அவர் இது தொடர்பாக சில அதிகாரிகளுக்கும் பிரதேச சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரிவித்த நிலையில் அங்கு கிளினிக் சென்ற திருக்கோவில் சுகாதார தாய்சேய் நல தாதிகளுக்கு பெற்றோர் இது தொடர்பாக முறைப்பாட்டு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சிறுவர் நன்நடத்தை அதிகாரி அங்கு சென்று சிறுமிகளிடம் வாக்கு மூலம் பெற்று பொலிஸாரிடம் தெரிவித்த போது பெற்றோரை முறைப்பாடு செய்யவருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர். இருந்தபோதும் பெற்றோர் திங்கட்கிழமை 21ம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர். இதனையடுத்து பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலம் பெற்றதுடன் சிறுமிகளை மேலதிக பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை குறித்த ஆசிரியர் நேற்று பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை எனவும் அவர் கூட்டம் ஒன்றிற்கு கல்முனைக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன். இவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.tk

Published by

Leave a comment