மகனின் உயிரைப் பறித்த சோற்றுப் பாத்திரம்

glass– அபூஹக்

வெலிகம்பிடிய: தாயின் கையிலிருந்த பெரிய கண்ணாடிப் பாத்திரம் தவறி விழுந்ததில் பாரிய காயத்திற்கு இலக்கான ஹொரண வெலிகம்பிடியவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பொழும்பு தேசிய வைத்தியசாலையில் 05 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆந் திகதி புதுவருட தினத்தன்று வீட்டுக்கு வருகை தந்த உறவினர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக எடுத்த கண்ணாடியிலான பாத்திரம் தாயின் கையிலிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவன் ஓடிவந்தபோது பாத்திரத்தில் மோதுண்டதில் காயத்திற்கு இலக்கானதாக பொலீஸார் தெரிவித்தனர்.

Published by

Leave a comment