புத்தளம் மாவட்டத்தில் திடீர் சூறாவளி!

wind air– இர்ஷாத் றஹ்மத்துல்லா 

புத்தளம்: புத்தளம் மாவட்டத்தின் ஊடக திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்றினால் 6 வீடுகளும்,7 மீன்பிடி படகுகளும் சேதத்துக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.இன்று மாலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவில் கொட்டுக்கச்சி வடத்த கிராமத்தில் 6 வீடுகள் இவ்வாறு சூறாவளியினால் சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன்,கல்பிட்டி மீனவ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 7 மீனவ படகுகளும் சேத்துக்குள்ளாகியுள்ளது.

சூறாவளியினால் எற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் மதீப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதுடன்,இது வரைக்கும் உயிர் ஆபத்துக்களோ அல்லது காயமுற்ற சமபவங்கள் தொடர்பிலும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென்று அணர்த்த முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

Published by

Leave a comment