கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் போல் பாப்ரஸ் உடன் அமுலுக்கு வரும்வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் சபையில் புதிய பதவியொன்றை பொறுப்பேற்கவே பாப்ரஸ் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் உறுதிசெய்தது.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பீட்டர் மூரின் உதவிப்பயிற்சியாளராக போல் பாப்ரஸை நியமிக்க கடந்த வாரம் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அவரை அணுகியதை அடுத்து இந்த விவகாரம் இழுபறியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை வந்த பாப்ரஸ் கடந்த இரு தினங்களாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகளை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாப்ரஸ் மூன்று மாதங்களுக்கு முன்னரே இலங்கை கிரிக்கெட் சபையுடன் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். பாப்ரஸ் பயிற்சியாளர் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இலங்கை அணி களத்தில் சிறப்பாக செயற்பட்டாலும் ஆடு களத்திற்கு வெளியில் பெரும் குழப்ப நிலையில் இருந்தது. பாப்ரஸின் பயிற்சியில் இலங்கை விளையாடிய 18 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே தோல்வியடைந்து இருந்தது. ஆனால் இலங்கை கிரிக்கெட் சபையுடனான முந்தைய வீரர்கள் ஒப்பந்தம் காலாவதியாகி 7 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் இரு தரப்புக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்தாகாமல் குழப்ப நிலை காணப்படுகிறது.
அதேபோன்று இருபது-20 ஓய்வு அறிவிப்பு விவகாரத்தில் சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் முறுகளில் உள்ளனர். ஆனால் களத்துக்கு வெளியில் தாம் எந்த மோசமான அனுபவத்தையும் சந்திக்கவில்லை என்று பாப்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை அணியுடன் கழித்த காலம் சிறப்பாக இருந்தது. கடந்த தடவையும் அது நல்ல முறையில் இருந்தது. தற்போதும் அது சிறப்பாக இருந்தது. அது மகிழ்ச்சியாக இருக்காவிட்டால் முடிவொன்றை எடுக்க எனக்கு இலகுவாக இருந்திருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார். “இதில் எந்த அசம்பாவிதமும் இல்லை. சிலவேளைகளில் 100 வீதம் அவதானம் செலுத்தவேண்டிய வாய்ப்புகள் தேடிவரும். அது எல்லா தொழில்களிலும் இருக்கிறது. இதற்கு பின்னால் எந்த கதையும் இல்லை. கடந்த வியாழக்கிழமை தொடக்கம் அவர்கள் (இங்கிலாந்து கிரிக்கெட் சபை) ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதனை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதே தற்போதிருக்கும் விடயமாகும்.” என்று பாப்ரஸ் முன்னர் கூறியிருந்தார்.
அதிக சம்பளம் மற்றும் தனது தாய் நாட்டுக்காக பணியாற்றுவதில் உள்ள விருப்பம் காரணமாகவே பாப்ரஸ் இலங்கை பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்கூட்டியே விலகுவதற்கு பிரதான காரணம் என்று நம்பப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை பாப்ரஸ{டன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இலங்கை கிரிக்கெட் செயலாளர் நி’hந்த ரணதுங்க, பாப்ரஸ{க்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை கவர்ச்சிகரமான சலுகை வழங்க முன்வந்திருப்பதாக குறிப்பிட்டார்.
“ஒரு சாதாரண மனிதனின் கோணத்தில் இதனை பார்த்தால் எம்மைப் போன்ற ஒரு சபையை விடவும் அவர்களால் அதிக சம்பளம் வழங்க முடியும்” என்று கூறிய ரணதுங்க “அவர் எம்மிடம் அது போன்ற எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை. ஆனால் இங்கிலாந்து சபை கவர்ச்சிகரமான சலுகைகளை தர வாக்குறுதி அளித்ததாக அவர் கூறினார்.;” என்று நி’hந்த ரணதுங்க குறிப்பிட்டார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபை போன்று அதிக சம்பளம் வழங்கும் இலங்கை கிரிக்கெட் சபை இல்லை. சாதாரண சம்பளம் காரணமாக இலங்கை அணிக்கு முன்னணி பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க முடியாத நிலையிலேயே இங்கிலாந்தின் யொக்’யர் கழகத்தில் இரண்டாம் நிலை பயிற்சியாளராக இருந்த பாப்ரஸை இலங்கை கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக நியமித்தது.
எனினும் இங்கிலாந்து பயிற்சியாளர் பதவிக்கு தாம் விண்ணப்பிக்கவில்லை என்று குறிப்பிட்ட பாப்ரஸ் அது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையே தம்மை அணுகியதாக கூறினார். இங்கிலாந்து தலைமை பயிற்சியாளராக பீடடர்; மூர்ஸ் நியமிக்கப்பட இரு தினங்களுக்கு முன்னர் அதாவது கடந்த வியாழக்கிழமையே பாப்ரஸை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அணுகியுள்ளது. இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக பாப்ரஸை நியமிப்பது குறித்து தலைமை பயிற்சியாளர் விருப்பம் காட்டியிருப்பதாக தெரியவருகிறது.
இலங்கை அணிக்கு அடுத்த மே மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு சர்வதேச போட்டிகள் உள்ள நிலையில் பாப்ரஸ் பதவி விலகியது இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அணியின் எதிர்வரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடர்ந்து அது ஜ_லையில் உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியான தென்னாபிரிக்காவுடன் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. தொடர்ந்த பாகிஸ்தான் அணி எதிர்வரும் ஓகஸ்டில் முழுமையான கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாட இலங்கை வருவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதேபோன்று இலங்கை அணி 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான நம்பிக்கையுடன் அதற்கான திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா, நியுஸிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ணத் திற்கு சுமார் ஓர் ஆண்டாவது அணியுடன் செயற்பட்ட அனுபவம் கொண்ட தலைமை பயிற்சியாளருடன் பங்கேற்க இலங்கை அணி எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில் இலங்கை அணியின் அடுத்த சுற்றுப்பயணத்திற்கு இடைக்காலப் பயிற்சியாளர் ஒருவரே நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு நியமிக்கப்படும்பட்சத்தில் அத்தப்பத்து கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் ஏழாவது நபராக இருப்பார். குறித்த காலப்பிரிவில்; டிரவொர் பெய்லிஸ், ஸ்டுவட் லோ, ருமேஷ் ரத்னாயக்க, nஜப் மார்ஷ், கிரஹம் போர்ட்; மற்றும் பாப்ரஸ் ஆகியோர் இலங்கை அணி பயிற்சியாளராக செயற்பட்டுள்ளனர். புதிய பயிற்சியாளரை தேர்வுசெய்வதற்கான விண்ணப்பம் கோரப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று செயலாளர் ரணதுங்க குறிப்பிட்டார்.
– தினகரன்
Published by

Leave a comment