நிஸாம் முகம்மது சவுஜீன் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

sawjeen– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் 5குறிச்சி முஸ்தபா ஹாஜியார் வீதியில் வசிக்கும் நிஸாம் முகம்மது சவுஜீன் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

இலங்கை போக்குவரத்து சபை காத்தான்குடி சாலையின் உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் இவர் சமாதான நீதவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் சிவில் இணைப்பாளரும்,சிவில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினரும்,காத்தான்குடி அல் ஹிறா மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.

பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் இணைந்து செயற்படும் ஒரு சமூக சேவையாளரான இவர் என்.எம்.எம்.நிஸாம், ஏ.பி.சரீனா ஆகியோரின் புதல்வருமாவார்.

sawjeen / saujeen
நிஸாம் முகம்மது சவுஜீன்

Published by

Leave a comment