விமானத்தின் சக்கரங்களுக்கு அருகே அமர்ந்து பயணித்த பையன்

planeகலிபோர்னியா: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் அமர்ந்தவாறு 16 வயதுப் பையன் ஒருவன் திருட்டுத் தனமாக பயணம் செய்துள்ளான். உறையும் குளிரில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாயி வரை 5 மணி நேரப் பயணத்தை இந்தப் பையன் கடந்து வந்துள்ளதாக ஹவாயி காவல்துறையினர் தெரிவித்தனர்.

பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பயணத்தில் வரும்வழியில் போதியதளவு பிராணவாயு (ஒக்ஷிஜன்) இல்லாமல் மயங்கியிருந்த அந்தப் பையனுக்கு விமானம் தரையிறங்கும்போது நினைவு திரும்பியுள்ளது.

அவன் உயிருடன் இருக்கிறான் என்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் என்று ஹவாயி ஏர்லைன்ஸ் விமானசேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி பையனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

– BBC

Published by

Leave a comment