கொழும்பு: பருகுவதற்கு ஒவ்வாத மண்ணெண்ணெய் மணத்துடன் கூடிய 37,000 தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர். கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண் டோவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து நேற்றுக் காலை களனி தலுகம பகுதியிலுள்ள குடிநீர் போத்தல் தயாரிக்கும் பிரபல தொழிற்சாலையொன்று சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
இதன்போது 1500 மில்லி லீற்றர் தண்ணீர் கொண்ட 12,000 போத்த ல்களும், 500 மில்லி லீற்றர் தண்ணீர் கொண்ட 25,000 போத்தல்களும் கைப்பற்றப் பட்டன. நிரப்பப்பட்ட தண்ணீரில் மண்ணெண்ணெய் மணம் வீசுவதாக கண்டுபிடிக்கப்பட்டதுடன் தண்ணீரில் மண்ணெண்ணெய் கலந்துள்ளதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தண்ணீர் நிரப்புவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் வெற்றுப் போத்தல்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தண்ணீர் போத்தல்களில் மண்ணெண் ணெய் கலந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே அமைச்சர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி பிரபல தண்ணீர் போத்தல் கம்பனியில் தயாரிக்கப்படும் தண்ணீர் போத்தல்கள் இலங்கையில் முதல்தர ரெஸ்டுரன்கள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், சூப்பர் மார்கட்டுகளுக்கும் விநியோகிக்க ப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ள சுமார் 25,000 தண்ணீரிப் போத்தல்களை சந்தையிலிருந்து திரும்ப பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாண்டோவின் பணிப்புரைக்கமைய இவை சந்தையிலிருந்து மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது.TK
Published by


Leave a comment