ஆனமடுவ: ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஆனமடுவ பொலீஸார் தெரிவித்தனர். இன்று (21) இது கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட பிரஸ்தாப நபர் வேட்டையாடும் வகையில் இதனை பயன்படுத்துவதாக ஆனமடுவ பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.என். ப்ரியலாலுக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார். சந்தேக நபர் புத்தளம் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Published by
![300px-Arrest.svg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/300px-arrest-svg1.png?w=150&h=150)
Leave a comment