இலங்கை சுற்றுப்பயணத்தை தவிர்த்து ஐ.பி.எல். இல் விளையாட மாலிங்க, திசர பெரேராவுக்கு அனுமதி

SRI LANKA CRICKET LOGO[1]கொழும்பு: இலங்கை அணியின் எதிர்வரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தவிர்த்து தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் தொடர்ந்து பங்கேற்க அதில் விளையாடும் இலங்கை வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேராவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அணி தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

இதில் அயர்லாந்துடனான தொடரில் லசித் மாலிங்கவுடன் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரது பங்கேற்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது என்று சனத் ஜயசூரிய குறிப்பிட்;டார்.

மறுபுறத்தில் இலங்கை கிரிக்கெட் மற்றும் வீரர்களுக்கு இடையிலான ஒப்பந்த விவகாரம் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், எதிர்வரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணங்களுக்கு வீரர்கள் தமது பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என தேர்வுக்குழுவினர் கோரியுள்ளனர்.

எதிர்வரும் மே 6 ஆம் திகதி ஆரம்பித்து ஜ_ன் 28 ஆம் திகதிவரை இடம்பெறவிருக்கும் இந்த இரட்டை சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது குறித்து அறிவுறுத்துமாறு தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய வீரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் அயர்லாந்து செல்லும் இலங்கை அணி டப்லினில் எதிர்வரும் மே 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் அயர்லாந்து அணியுடன் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. தொடர்ந்து இரண்டு இருபது-20 போட்டிகளுடன் இலங்கை-இங்கிலாந்து போட்டித் தொடர் ஆரம்பமாகிறது. இரு நாடுகளுக்கும்; இடையில் ஐந்து ஒருநாள் மற்றும் லோட்ஸ், ஹெடிங்லி அரங்கில் நடக்கும்; இரு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இதில் குறித்த சுற்றுப் பயணத்திற்கான பிரத்தியேக ஒப்பந்தத்திலும் வீரர்களால் கைச்சாத்திட முடியும் என்று இலங்கை கிரிக்கெட் செயலாளர் நி’hந்த ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இது வீரர்கள் ஒப்பந்த விவகாரத்தில் தீர்வொன்றை எட்டுவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதை காட்டுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் ஐ.சி.சி. வருவாயில் 20 வீதத்தை தரும்படி வீரர்கள் கோருகின்றனர். இந்த சர்ச்சை காரணமாக முன்னணி வீரர்கள் நடந்து முடிந்த இருபது-20 உலகக் கிண்ணத்தை தவிர்க்கும் சூழல் இருந்தபோதும் கடைசி நேரத்தில் போட்டியில் பங்கேற்று கிண்ணத்தையும் வென்றனர். TK

Published by

Leave a comment