மட்டக்களப்பு: சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவனம் நடாத்திய குழுக்கள் போட்டியில் வெற்றியீட்டிய 6 அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதியான பரிசு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவன முன்றலில் 20-04-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவன உரிமையாளர் எஸ்.எச்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமையாளர் பி.ரமனதாசன் கலந்து கொண்டார்.
இதன் போது வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவனத்தில் 5000.00 ஐயாயிரம் ரூபாய் மேல் வாடிக்கையாளர்களில் குழுக்கள் போட்டி மூலம் வெற்றியீட்டி முதலாவது அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்ட கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த ரி.சிவசிங்கத்துக்கு 2.36000.00 இரண்டு இலட்சத்தி முப்பத்தி ஆறாயிரம் ரூபாய் பெறுதியான பல்சர் மோட்டார் சைக்கிளும் ,இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த கே.எஸ்.சிவத்துக்கு 12.500.00 பண்ணிரண்டு ஆயிரத்து ஐநூறு ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டியும் ,மூன்றாவதாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் சந்திரகாசனுக்கு 5000.00 ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான சல்வார் கிட் ஒன்றும் , கல்லடி வி.பராதீவன் ,மட்டக்களப்பு எஸ்.பஹிரதி, பாலமுனை கே.எல்.எம்.ஜிப்ராஸ் ஆகிய மூவருக்கு பேருக்கு ஆறுதல் பரிசாக 2000.00 இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான பஜாஜ் மின் அழுத்தியும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவனத்தில் சிறந்த முகாமையாளராக தெரிவு செய்யப்பட்ட பைஸர்,மின்ஹாஜ் உட்பட சிறந்த களஞ்சிய பராமரிப்பாளர் இருவருக்கும் ,உதவி விற்பனையாளர் ஐவருக்கும்,அதிதிகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமையாளர் பி.ரமனதாசன் , வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவன உரிமையாளர் எஸ்.எச்.எம்.நஸீர்,நியூ றகுமாஸ் உரிமையாளர் இர்ஸாட், பிர்தௌஸ் காமன்ட் உரிமையாளர் பிர்தௌஸ் ,போஸ்டன் சூ வேயார் உரிமையாளர் முபாறக் வாடிக்கையாளர்கள், வேல்ட் பெஷன் ஆடை நிறுவன விற்பனை பிரதிநிதி ஆசிரியர் நிஸார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவனம் வாடிக்கையாளர்களின் நன்மைகருதி பல்வேறு புதிய சேவைகளை ஆரம்பித்துள்ளது அதில் பரிசு வவுச்சர்,விலைக் கழிவு அட்டை போன்ற சேவைகளை தற்போது ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment