எனது என்று சொல்ல
தொழுவோரின்றி
திறந்திருக்கிறது
வீதிக்கொரு பள்ளிவாயல் …
ஓட்டுவாரின்றி
தூசு படிந்திருக்கிறது
வீட்டுக்கிரு மோட்டர் வண்டி …
அணிவாரின்றி
அடுக்கடுக்காய்
குவிந்திருக்கிறது ஆடை …
உண்பாரின்றி உணவுகளும்
உறங்குவாரின்றி உறைவிடமும்
தேவைக்கு அதிகமாகவும்
இருக்கிறது !
எமது என்று சொல்ல ஒரு
அச்சு
இலத்திரனியல் ஊடகம் இன்றி !!

Leave a comment