காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மாநாடொன்று 20-04-2014 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்னாலுள்ள பஸ்மலா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இங்கு அறிவுபூர்வமான மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் பி.எம்.அஸ்பர் (பலாஹி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளதுடன் கலிமாவை அறிந்துகொள்வதன் அவசியம் என்ற தலைப்பில் மௌலவி எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.
இதில் அணைத்து இஸ்லாமிய சகோதரர்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
Published by


Leave a reply to akram Cancel reply