துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயமும், இலங்கை கலாச்சார மன்றமும் இணைந்து சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றினை கடந்த 2014.04.14 அன்று லதீபா மைதானத்தில் ஏற்பாடு செய்து இருந்தது.
இலங்கையின் கலாச்சார பண்பாடுகளை பிரதிபளிக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியினை துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் எம் . எம். அப்துல் றஹீம் காலை 8.00 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக தொடங்கி வைத்தார் .
ஒரு நாள் நிகழ்வாக இடம்பெற்ற கொண்டாட்டத்தில் துபாய் வாழ் இலங்கையர்கள் பலர் தமது குடும்பத்தினர் சகிதம் கலந்து கொண்டனர் . சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் பல சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
மற்றும் இலங்கையின் மரபு ரீதியான உணவுப்பண்டங்கள் தயாரித்து காட்சிக்கு வைக்கப்பட்டதோடு கலாச்சார நிகழ்ச்சிகளில் பலரும் கலந்து சிறப்பித்தனர் . இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை நிரந்தரமானதாக அமைவதோடு சகல இனங்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே புதுவருட நிகழ்வுகளின் தொநிபோருளாக இருந்தது.
Published by




Leave a comment