ஜனாதிபதி மாளிகையில் தப்பியோடிய கிளிகள்!!

parrot-s-90

கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மாளிகையில் இருந்து 4 வெளிநாட்டு ரக கிளிகள் தப்பி ஓடிவிட்டன. இவற்றை தேடி ஒப்படைக்க ‘தொலைபேசி’ எண்களையும் இலங்கை அரசு வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மாளிகையில் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த 4 மெக்கோ கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தன.  கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கிளிகள் 4-ம் சொல்லி வைத்தாற்போல மகிந்த ராஜபக்சேவின் மாளிகையை விட்டு தப்பி ஓடிவிட்டன. இதில் அதிர்ச்சியும் துயரமும் அடைந்து போனராம் ஜனாதிபதி.

உடனே ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ஜனாதிபதியின் கிளிகள் தொலைந்து போய்விட்டன.. கண்டுபிடிப்போர் தகவல் தரவும் என்று கூறி ஒரு எண்ணையும் கொடுத்துள்ளனர். பொலிஸாரின் உதவியுடன் இக்கிளிகள் 4உம் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் ஜனாதிபதி மாளிகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment