காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கீழ் இயங்கும் புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயத்தில் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று 10.04.2014 வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு ‘சுகாதாரமான குழந்தை வளர்ப்பும் பெற்றோரும்’ எனும் தலைப்பில் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைய உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் அதிகாரியான ஏ.எல்.எம்.றிஸ்வி பெற்றோருக்கு விரிவுரை நிகழ்த்தினார்.
இக்பால் வித்தியாலய அதிபர் முஹமட் ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் .அலி சப்ரி, ஆசிரிய நிலைய முகாமையாளர்.எஸ்.சரீப்தீன் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர்களான நவாஸ், அலாவுதீன் ஆகியோரும், ஏனைய பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment