லண்டன்: மகளிர் இங்கிலாந்து அணியின் டேனியல் யாட், கோஹ்லிக்கு விட்ட காதல் தூதை தொடர்ந்து சக வீராங்கனையான சாரா டெய்லர், ரவீந்திர ஜடேஜாக்கு ‘டுவிட்’ செய்துள்ளார். டி20 உலகக்கிண்ணம் தொடங்கியதில் இருந்தே ஆடவர் இந்திய அணியினருக்கும், மகளிர் இங்கிலாந்து அணிக்கும் ஏதோ இணைப்பிரியாத தொடர்பு நிலைவி வருகிறது.
விராட் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் கவரப்பட்ட இங்கிலாந்து மகளிர் அணியின் டேனியல் யாட் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெளிப்படையாக தெரிவித்து ரசிகர்ளிடையே சர்ச்சையை ஏற்படுத்தினார். கோஹ்லி எந்த பதிலும் அளிக்காத நிலையில், கோஹ்லியின் தாயார் மறைமுகமாக தனது எதிர்ப்பை டேனியல் யாட்டுக்கு தெரிவித்திருந்தார்.
அந்த சலசலப்பு சற்றே ஓய்ந்திருந்த நிலையில், மறுபடியும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் சாரா டெய்லரிடம் இருந்து இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாக்கு ‘டுவிட்’ வந்துள்ளது.
மகளிர் உலக கிண்ணப்போட்டியில் இங்கிலாந்து அணியும், ஆடவர் உலக கிண்ணப் போட்டியில் இந்தியாவும் இறுதிப்போட்டியில் விளையாடியது. ஆனால் இரண்டு அணியும் தங்கள் கிண்ணத்தை தவறவிட்டது. அன்றிரவு தான் டுவிட்டரில் இருவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். LS
Published by

Leave a comment