மட்டக்களப்பு: இன்று பண்டிகை காலம் என்பதால் மட்டக்களப்பில் வியாபார நடவடிக்கைகள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதேநேரம் மாணவர்களுக்கு பரீட்சை முடிவடைந்து வீடுகளிலும், விளையாட்டுக்களிலும் காலத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகமான வியாரிகள் தங்களது வியாபார நிலையங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று வேலைக்கமர்த்தியுள்ளனர். சிறுவர்களுக்கான ஓய்வினை அனுபவிக்கும் உரிமை மறுக்கப்பட்டு கூடுதலான நேரம் வேலைத்தளங்களில் எடுபிடி வேலை செய்வதற்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் சிறுவர்கள் பெரியோர்களுடன் அன்னியோன்யமாகப் பழகும் வாய்ப்புக் கிடைக்கிறது. இதனால் தகாத வார்த்தைகள் மற்றும் வயதுக்கு மீறிய பேச்சுக்களை கற்றுக் கொள்கின்றனர்.
18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் அனைவரும் சிறுவர்களென ஜக்கிய நாடுகள் சிறுவர் சமவாயத்தின் குறிப்பிடப்படுகின்றது. சிறுவர்கள் பாதுகாப்பிற்கும், அன்பிற்கும், கௌரவத்திற்கும் உரித்தானவர்கள். சிறுவர்கள் உரிமைகள் சம்பந்தமாக சட்டங்களும், கொள்கைகளும் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன இருக்கின்ற போதும். சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமையும் தொழில்களிற்கு அமர்த்தியிருப்பதைம் காணக்கூடியதாகவுள்ளது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசும், பொதுமக்களும் சட்டரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளனர்.
இலங்கை சட்டரீதியாக ஓர் இரட்டைத்தன்மை கொண்ட நாடாக காணப்படுவதனால், சர்வதேச சட்ட ஏற்பாடுகளை நேரடியாக உள்நாட்டு சட்டமாக அமுல்படுத்தவோ சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்கவோ முடியாது. அதாவது ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை சமவாயத்தில் உள்ள விடயங்களை இலங்கை நீதிமன்றங்கள் நேரடியாக சட்டமாக அமுல்படுத்த முடியாது. இச்சர்வதேச சட்டங்கள் முதலில் உள்நாட்டு சட்டமாக கொண்டு வரப்பட்டால் மாத்திரமே எமது நாட்டு நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெற முடியும்.
5 வருடங்களுக்கு குறைவான வயதையுடைய குழந்தை எவரும் ஒரு சிறுபராயத்த வராவார். 5 வருடங்களுக்கு மேற்பட்டவரும் ஆனால் 14 வருடங்களுக்கு குறைவான வயதையுடைய எந்தவொரு நபரும் சிறுவரொருவராவார். கல்வி கட்டளைச்சட்டம் தெளிவாகக் கூறுகிறது. 14 வயதுக்குட்பட்ட நபரொருவர் சிறுவராகவும், 14-16 வயதுக்குட்பட்ட எந்த நபரும் இளைஞராகவும் கருதப்படுகின்றார். சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச்சட்டம், கடை காரியாலய கட்டளைச்சட்டம் விரிவாக இதுபற்றி எடுத்துக் கூறுகின்றது.
14 வருடங்களுக்கு மேற்பட்ட ஆனால் 18 ஆண்டுகளுக்குட்பட்ட வயதையுடையர் இளம் ஆளொருவராவார். பெண்களையும் இளம் ஆட்களையும் சிறுவர்களையும் தொழிலுக்கமர்த்தல் சட்டம் இது பற்றி எடுத்துக் 16 வருடங்களுக்கு குறைந்த வயதையுடைய பெண்ணொருவர் யுவதியொருத்தியாவார். அலைந்து திரிபவர்கள் கட்டளைச் சட்டம் குறிப்பிடுகின்றது. பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆளொருவர் வயதுவந்தவரொருவராக கருதப் படுகின்றார். 1895ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க வயது முதிர்ச்சிக் கட்டளைச் சட்டம் இதனை விளக்குகிறது.
இன்று எமது நாட்டில் சிறுவர்கள் பலத்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொல்லை தருகின்ற தொலைக்காட்சியில் குடும்பத்தினர் மூழ்கிப்போய்விடுகின்றனர். கற்பனையில் எழுதப்பட்ட தொடர் நாடகங்களைப் பார்த்து நிஜவாழ்க்கையில் நிகழ்த்திப் பார்க்க நினைக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரங்கள் பொலிஸ் நிலையங்களிலும், ஏனைய சமூக மட்டத்திலும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டாலும், அவைகள் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல் சமாதானப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரியது. இதனால் தப்புச் செய்கின்றவர்கள் இலகுவில் தப்பித்துக் கொள்கின்றனர். இதற்கு சாட்சிகள் முன்வராமை, சமுகத்தின் ஏளனமான பார்வை, ஆதாரங்கள் அழிக்கப்படல் என்பவைகள் வழக்கொன்றை தொடர்வதற்கு பலமற்ற விடயங்களாக இருக்கின்றது.
எமது நாட்டில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு செல்லும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் குடும்பத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பெற்றோர்கள் கடினமாக உழைத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாய தேவைக்கு ஆளாகுகின்றனர். அது மட்டுமன்றி, குடும்பச்சுமைகளை சுமக்கின்ற தாய்மார்கள் வேலைக்கு செல்லும் போது ஏற்படும் விபரீதங்கள் பற்றியும், சமுகத்தில் உள்ளவர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணங்களினால் பெற்றோர்கள் அறியாத வகையில், சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறான செயல்கள் மூலமாக சிறுவர்கள் உடல், உள ரீதியான வேதனைகளை அடைகின்றனர். எம்மில் அனேகமானவர்களுக்கு பாலியல் தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும்.
இது பற்றி 1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி, இக்குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறுவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவது, ஒருவரைத் துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது. ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது. இக்குற்றத்திற்கான தண்டணையானது, பத்து வருட சிறைத் தண்டணையும், தண்டப்பணத்துடன் அல்லது தண்டப் பணம் இன்றி மேலும் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தமானது என கருதும் நட்டஈட்டினை கொடுக்கும்;படி நீதிபதி கட்டளையிட வாய்ப்புண்டு.
எனவே சிறுவர்களுக்கு எதிராக புரியப்படும் குற்றங்கள் அனைத்தும் நீதிமன்றம் மூலம் நியாயத் தீர்ப்பு வழங்குவதன் மூலமே, மக்கள் மத்தியில் நம்பிக்கையினை கட்டியெழுப்ப முடியும் என்பதை மேற்படி சம்பவம் எடுத்துரைக்கிறது. ஒவ்வொருவரும் கல்விபெற உரிமை உண்டு. தொடக்க நிலையிலேனும் அது எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். மனித உரிமைகள் விடயங்களைக் கண்டறியவும் கல்வி அடிப்படைத் தேவையாகவுள்ளது. ஆனால் எமது பிரதேசத்தில் வயல்வெட்டு காலங்களிலும், கோவில் உற்சவ காலங்களிலும், மற்றும் இன்னோரன்ன விடயத்திற்காகவும் பிள்ளைகளை பாடசாலைக்கு பெறறோர்கள் அனுப்புவதில்லை. இது பிள்ளையுடைய கல்வியினை பெரிதும் பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் உலகில் 10 முதல் 15 கோடி வரை தெருச் சிறுவர்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 – 10 சதவீதம் பேர் தங்களது குடும்பங்களால் கைவிடப்பட்டவர்களாகவோ, குடும்பங்களை விட்டு ஓடிவந்தவர்களாகவோ இருப்பர்.
உலகில் ஐந்து வயதுக்கு கீழ்பட்ட சிறார்கள் ஒரு கோடிப் பேர் ஓராண்டுக்குள் மரணமடைகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் காப்பாற்றக்கூடிய நோய்களிலும், ஊட்டச் சத்தின்மையாலும் பாதிக்கப்பட்டோர் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகிறது. சிறுவர்கள் தமது சமய கலாச்சார ச10ழலில் வளர உரிமை உண்டு. ஆகையால் சமய நம்பிக்கைகள், கலாச்சார அம்சம்கள் முக்கியம் வாய்ந்தன என்பதை கற்றுக் கொடு;;ப்பதுடன் மற்றைய மதங்களையும் மதிக்கப் பழகிக் கொடுக்க வேண்டும்.
வறுமையின் காரணமாக குடும்பத்திற்கு பணம் ஈட்டுவதற்காக பிள்ளையினுடைய உதவி தேவை என்பதால் பிள்ளையினை பாடசாலைக்கு செல்வதை தடை செய்ய வேண்டாம். தகப்பன் வேலைக்குச் செல்பவராக இருந்தால் வேலைத்தளத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வீட்டில் தீர்வு காண முற்பட வேண்டாம். உங்களுடைய பிரச்சினைகளுக்கு பிள்ளை பொறுப்பு இல்லை. மற்றவர்கள் செய்த பிழைகளுக்கு பிள்ளைகளை பலியாக்க வேண்டாம். உங்கள் சமுகத்திலுள்ள சிறுவர் துஸ்பிரயோகத்தினை முறையிடாமல் தட்டிக் கழிக்கும் சந்தர்ப்பத்தில் நீங்கள் குற்றவாளியாகின்றீர்கள்.
Published by


Leave a comment