காத்தான்குடி: காத்தான்குடி மத்தியஸ்தர்கள் சபை உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேல் மத்தியஸ்த சபையில் பணியாற்றியதை கௌரவிக்கும் முகமாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பரிந்துரைக்கமைய அகில் இலங்கை சமாதான நீதவான் பதவி நீதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியின் மூத்த தலைவர்களான எம்.ஐ.எம். முஹைதீன், எம்.ரீ.எம்.காலித், மௌலவி எம்.வை. அப்துல் றஸ்ஸாக், எம்.சி.எம்.ஜௌபர், ஒய்வு பெற்ற ஆசிரியர்களான ஏ.எல்.ஏ.அஸீஸ், யூ.எல்.ஏ.ஹகீம், ஒய்வு பெற்ற அதிபர் எம்.எல்.ஏ.லத்தீப், ஒய்வு பெற்ற பிரதேச செயலக அதிகாரி எம்.ஐ.எம்.காஸிம்எம்.ஐ.கே.முஹம்மத் ஆகியோருக்கு இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி மத்தியஸ்தர்கள் சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.உசனார் ஜேபி தெரிவித்தார்.
இந்நியமனத்துக்கான நியமனக்கடிதம் வழங்கும் விஷேட வைபவம் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.45. மணிக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்ஷஹீட் அகமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் இதில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் காத்தான்குடி மத்தியஸ்த சபை உறுப்பினரும்,காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவருமான மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) தெரிவித்தார்.
Published by


Leave a comment