காத்தான்குடி: இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2013 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் 9 ஏ சித்தியும் 6 மாணவர்கள் 8 ஏ 1 பி சித்தியும் ஒரு மாணவன் 8 ஏ 1 சி சித்தியும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் ஜனாபா எம்.ஏ.எம்.யூ. மாஹிரா தெரிவித்தார்.
இதில் முஹம்மது சித்தீக் முஹம்மது முஸ்தகீம், அப்துல் அனஸ் அஸீர் அஹமட், முஹம்மது அமீனுல்லாஹ் றஸீதுர் றிபாயீ, முஹம்மது சித்தீக் முஹம்மது உஸைர் ஆகிய நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தியும், முஹம்மது ஸாஹிர் முஹம்மது அப்பாஸி , முபாறக் முஹம்மது முபர்ரிஜ், முஹம்மது அஜ்வத் முஹம்மது பயாஸ், முஹம்மது மர்சூக் முஹம்மது இன்ஸாப், முஹம்மது ஜௌபர் அஹமட் ஜஹீர் ஹஸன், பறக்கத்துல்லாஹ் அஹமட் ஸஃதி ஆகிய ஆறு மாணவர்களும் 8 ஏ 1 பி சித்தியும், அப்துல் வாஹித் முஹம்மது றஸ்மி என்ற மாணவன் 8 ஏ 1 சி சித்தியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment