கொழும்பு: ஐ.பி.எல் போட்டிகள்தான் எங்களுக்கு நல்ல பயிற்சிக்களமாக அமைந்தது. அந்த அனுபவம்தான் எங்களுக்கு டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்ல உதவியாக இருந்தது என்று இலங்கை அணித் தலைவர் லசித் மலிங்க கூறியுள்ளார்.
கொழும்பு வந்து சேர்ந்த உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் இலங்கை வீரர்கள் பேசினர்.
இலங்கை அணித் தலைவர் மலிங்க பேசுகையில், உலகக் கோப்பயை வெல்ல தனக்கு ஐ.பி.எல் அனுபவம் பேருதவி புரிந்ததாக குறிப்பிட்டார். மலிங்கவின் பேட்டியிலிருந்து… கடந்த 6 ஆண்டுகளாக ஐ.பி.எல்லில் ஆடி வருவது எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. அது எனக்கு உதவியுள்ளது.
இந்தியா துடுப்பெடுத்தாடியபோது கடைசி 4 ஓவர்களில் இந்திய வீரர்கள் ஓட்டங்கள் எடுக்க முடியமல் தடுமாறினர். இதுவே எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இறுதிப் போட்டியில் எப்படி ஆடுவது என்பது குறித்து நானும் மூத்த வீரர்கள் சங்கக்கரா, ஜெயவர்த்தனே உள்ளிட்டோர் கூடி விவாதித்து முடிவு செய்தோம். அதன்படி ஆடினோம் என்றார் மலிங்க. மலிங்கா ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வருகிறார்.
முன்பு ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவதற்காக சொந்த நாட்டுக்கு ஆடுவதையே தியாகம் செய்தவர், சுயநலக்காரர் என்று இலங்கையர்களால் விமர்சிக்கப்பட்டவர் மலிங்கா என்பது நினைவிருக்கலாம்.
எப்படி இருந்தபோதிலும் இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்தமைக்கு மலிங்கவுக்கு இலங்கை மக்கள் என்றும் நன்றியுடையவர்களே!
Published by

Leave a comment