18 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு மற்றுமொரு உலகக் கிண்ணம்: மகிழ்ச்சியில் உலகம்

unnamed (7)காத்தான்குடி: இருபது20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்திருக்கின்றமை இலங்கையரை மாத்திரமன்றி, உலக இரசிகர்களையும் மகிழ்வித்திருக்கின்றமை இலங்கை அணிக்குக் கிடைத்திருக்கும் ஓர் கௌரவமாக அமைகின்றது.

இலங்கை அணியின் சிரேஷ்ட நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்த்தனாவும், குமார் சங்கக்காரவும் தங்களது இறுதிப் போட்டியை டாக்கா மைதானத்தில் விளையாடி உலகுக்கு வரலாறு படைத்து விடைபெறுகின்றனர்.

1981ம் ஆண்டு உதயமான இலங்கை கிரிக்கட் வாரியத்தின் கீழ் அமையும் இலங்கை கிரிக்கட் அணி முதன் முறையாக 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று உலகச் சம்பியன் பட்டத்தை இலங்கைக்கு வழங்கியது. 1996 வெற்றியானது இலங்கையரை மாத்திரமன்றி,  முழு உலகையும் மகிழ்வித்து இலங்கை கிரிக்கட்டிற்கு கௌரவத்தையும் அளித்திருந்தது.

18 வருடங்களுக்குப் பின்னர் அன்று போன்ற அதே புகழை இன்று இலங்கை அணி இலங்கை மக்களுக்கு சமர்ப்பித்துள்ளனர். 

183479

2014ம் ஆண்டுக்கான உலக இருபது20 தொடரில் தான் எதிர்கொண்ட அத்தனை போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலமாக எதிர் அணிகள் இந்தியாவின் வீழ்ச்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடந்த 2012 இறுதிப் போட்டியில் தோற்று, 2014ல் உலகை வென்றிருக்கின்றது இலங்கை அணி. இதேபோல்தான் 2007ல் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி, 2009 இல் உலகக் கிண்ணத்தை வென்றது.

தற்பொழுது 30 வயதை எட்டும் இளைஞர்களுக்கு 1996 இலங்கையின் வெற்றி மறக்க முடியாது. இதே போல்தான் தற்பொழுது 5 வயதுக்கு மேல் இருக்கும் அனைவருக்கும் 2014 உலக வெற்றி மறக்க முடியாது.

உலகச் சம்பியன் இலங்கை அணியினருக்கு எமது வாழ்த்துக்கள்!

– உங்கள் காத்தான்குடி 

Published by

Leave a comment