வெற்றி மகுடம் சூடிய நாயகர்களுக்கு உளமார வாழ்த்துகின்றேன்…!!

Naafirமுஹம்மது காமில்

கொழும்பு: நேற்று நடைபெற்று முடிந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் எமது இலங்கை அணி வெற்றி பெற்றது தொடர்பாக சமூக சேவகரும் நாபீர் சமூக சேவை அமையத்தின் தலைவருமான பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.கே.நாபீர் அவர்கள் தெரிவித்த வாழ்த்து செய்தி வருமாறு.

இலங்கைத்தீவின் பெருமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றிய எமது வெற்றி நாயகர்களை வாழ்த்துவதில் இலங்கையன் எனும் வகையில் நான் பெருமிதம் அடைகின்றேன்.

சர்வேதேச கிரிகெட் கௌன்ஸிலினால் நடத்தப்பட்ட இருபதுக்கு இருபது உலக கிண்ண இறுதி சுற்றுப்போட்டியில் வெற்றி மகுடம் சூடிய எம் இலங்கை வீரர்களை இந்த உலகமே வாழ்த்துகின்றது என்பதில் இலங்கையை சேர்ந்தவன் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பதினெட்டு வருடங்களின் பின்னர் எமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும் சர்வதேச கிரிகெட் கவுன்சிலினால் நடத்தப்பட்ட பல உலககிண்ண இறுதிப்போட்டிகளில் எமது அணி இறுதிப்போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிவாய்ப்பை நழுவ விட்டது யாவரும் அறிந்ததே இருந்தாலும் இந்த வெற்றிமூலம் அடைந்த தோல்விகளை ஈடு செய்து விட்டது என்பது இச்சமயத்தில் குறிப்பிடத்தக்கதாகும். 

India v Sri Lanka - ICC World Twenty20 Bangladesh 2014 Final

1996 ம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண கிரிகெட் தொடரில் சம்பியன் ஆகியதன் பிற்பாடே எமது இலங்கைத்தீவின் பெருமையையும் சிறப்பையும் முழு உலகும் அவாதானிக்க தொடங்கியது என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. எமது நாட்டில் முப்பது வருடகால கொடிய யுத்தம் முடிவுற்ற நிலையிலும் பல்வேறுபட்ட பிரச்சினை கெடுபிடிகளை மக்கள் நாள் தோறும் அனுபவித்து வரும் நிலையிலும் மக்கள் எதையும் பொருட்படுத்தாது சர்வதேச விளையாட்டு அரங்கில் எமது நாட்டின் வெற்றியை வேண்டி சாதி மத இன வேறுபாடுகளும் இன்றி ஒருமித்து பிரார்த்தனை செய்து ஆவலுடன் காத்திருந்த எமது தாய் திருநாட்டு மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறிக்கொள்ளுவதில் பெருமிதம் அடைகின்றேன். அதே நேரம் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள எமது தேசத்தின் ஆணிவேர்களாகி எமது சகோதர சொந்தங்கள் தாங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து எமது தாய்நாட்டுக்காக அதன் வெற்றிக்காக பிரார்த்தனை புரிந்தது இவ்விடத்தில் கவணத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் இந்த சமயத்தில் தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பிறப்பில் வேறுபட்டாலும் என்றும் நாம் இலங்கை குடிமக்களே என்பதில் என்றும் நாம் பெருமைகொள்வோம். மென்மேலும் எமது அணி வெற்றி வாகை சூட இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ் – புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே..!!

Published by

Leave a comment