மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 7 தமிழ் முஸ்லிம் சமாதான நீதிவான்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதியமைச்சர் றஊப் ஹக்கீம் சிபாரிசில் நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த தமிழ் முஸ்லிம் சமாதான நீதவான்களை நியமித்துத்தருமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் நியமித்துள்ளார்.
குறிப்பிட்ட சமாதான நீதவான்களான மட்டக்களப்பு கோட்டமுனையைச் சேர்ந்த ஜனாப் அப்துல் லத்தீப் ஹிதாயத்துல்லா தீவுமுழுவதற்குமான சமாதான நீதவானாகவும், மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த கீதாச்சலி ரவிந்திரன் தீவுமுழுவதற்குமான சமாதான நீதவானாகவும, காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது ஹனீபா முகம்மது இப்றாகீம் மாவட்ட சமாதான நீதவானாகவும, மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த கச்சிமுகம்மது நிசாமுதீன் மாவட்ட சமாதான நீதவானாகவும், மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தம்பிராசா குகதாசன் மாவட்ட சமாதான நீதவானாகவும், மட்டக்களப்பு கொக்குவில்லைச் சேர்ந்த சிங்கராஜா வினோதன் மாவட்ட சமாதான நீதவானாவும், மட்டக்கப்பு நகரைச் சேர்ந்த தங்கரத்தினம் ரவிராஜா மாவட்ட சமாதான நீதவானாகவும் கடந்த 04 -04 -2014ம் திகதியன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
Published by


Leave a comment