திருகோணமலை: இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கக் கூட்டம் கடந்த 06.04.2014ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை திருகோணமலை பட்டினமும் சூழல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்தபுஞ்சி நிலமே தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சங்கத்தின் பிரதம செயலாளர் தேசகீர்த்தி அஜித் ஜயசுந்தர மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் மனஉளைச்சல்கள் பிரச்சினைகள் பற்றியும் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment