கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்து ICC T20 World Cup திரையரங்கு

unnamed (10)பழுலுல்லாஹ் பர்ஹான்

கல்குடா: 06.04.2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை நடை பெற்று முடிந்த ICC T20 World Cup இத்தியா மற்றும் இலங்கை அணிக்குமிடையிலான போட்டி நிகழ்வினை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வங்கதேசம் நோக்கி பயனித்திருத்தனர்.

இது இவ்வாறு இருக்கையில் இலங்கையில் இந்த இறுதி கிரிகட் போட்டியினை கான தலை நகரம் தொடக்கம் பல்வோறு மாவட்டங்களில் தொலை காட்சி நேரடி ஒளிபரப்பினை விளையாட்டு மைதானங்களிவும், வீதியோரங்களிலும், சௌகரியமான பல்வேறு பட்ட இடங்களில் திரையரங்குகளை ஒழுங்கு படுத்தி போட்டியினை மகிழ்ச்சி அராவாரத்துடன் கண்டு கழித்து இருத்தனர்.

மட்டக்களப்பு கல்குடா மீடியா போரத்தின் திரையரங்கு மற்றும் ஓலியமைப்பு அனுசரனையுடன் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தின் மீராவோடை கிராம இளைஞர்கள் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்து தாம் தமது தேசத்தின் மீது கொண்ட அக்கரையினையும், விசுவாசத்தையும் தேசியத்திற்கும் ,சார்வதேசத்துக்கும் எடுத்துரைக்கும் வகையில் இளைஞர்களது நெஞ்சிலும், முகத்திலும், கைகளிலும் தேசிய கொடியினை பொறிந்தவர்களாக மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ICC T20 World Cup தொலை காட்சி நேரடி ஒளிபரப்பு திரையரங்கினை நூற்றுக்கணக்கான இளைஞர்களும் சிறார்களும், பெறியவர்களுமாக பலர் தேசிய கொடிகளை அசைத்து போட்டி நிகழ்வை கண்டு அகம் மகிழ்த்தனர்.

இறுதியில் இலங்கை அணியின் வெற்றினை ஒருவரை ஒருவர் கட்டி தழுவி பட்டாசு கொழுத்தி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்த ICC T20 World Cup கிரிகட் தொலை காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்வை எந்த இடையுறும் ஏற்படுத்தாத வகையில் கண்டு கழித்து தமது தயகத்தின் வெற்றிக்காக பிராத்தித்த அனைவருக்கும் கல்குடா மீடியா போரத்தின் சார்பாக அதன் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மோளனத்தின் செயலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் இளைஞர்கள் மத்தியில் தெரிவித்துக்கொண்டார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment