பண மழையில்…மைக்ரோசொப்ட்..!

S-90

நியுயோர்க்: கால் காசு என்றாலும் அரசங்க வேலையாக இருக்க வேண்டும் என்பது பழயை ஸ்டைல்.  இப்போது எல்லாம் கால் காசு என்றாலும் சொப்ட்வெயார் வேலையாக இருக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இந்நிலையில் சில சொப்ட்வெயார்  நிறுவனங்கள் கடந்த 2013ஆம் நிதியாண்டில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவாயை குவித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளனர். கார்ட்னர் என்னும் ஒரு ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி கடந்த 2013ஆம் ஆண்டில் உலக சொப்ட்வெயார்  நிறுவனங்களின் வருவாய் 403.3 பில்லியன் டொலராக  உள்ளது. இது கடந்த வருடத்தை விட 4.8 சதவீதம் அதிகமாகும். இந்த வருடமும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தான் முதல் இடம்

உலக  சொப்ட்வெயார் துறையில் மன்னனாக விளங்கும் மைக்ரோசப்ட் நிறுவனம் கடந்த வருடம் 65.7 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது.

லேரி எலிசன் தலைமை வகிக்கும் ORACLE நிறுவனம் கடந்த வருடம் 29.6 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளது. இதனால் ORACLE இரண்டாம் இடத்தில் உள்ளது.

வன்பொருள் மற்றும் மென்பொருளை சிறப்பான முறையில் தயாரிக்கும் IBM  நிறுவனத்தின் வருவாய் 29.1 பில்லயன் டொலர். ORACLE நிறுவனத்தை தொடர்ந்து IBM முன்றாம் இடத்தில் உள்ளது.

எஸ்ஏபி நிறுவனம் கடந்த வருடம் 18.5 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது இந்நிறுவனம் அடைந்த உயரிய வருவாய் என்பது குறிப்பிடதக்கது

கடந்த வருடத்தில் சிமென்டெக் நிறுவனத்தின் வருவாய் 6.4 பில்லயன் டொலர் ஆகும்.

ஈஎம்சி2 நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டு வருவாய் 5.6 பில்லியன் டொலர்.

HP நிறுவனமும் IBM நிறுவனத்தை போலவே வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஒர் நிறுவனம். இந்நிறுவனத்தின் வருவாய் 4.9பில்லியன் டொலர்.

2013ஆம் ஆண்டின் VMware நிறுவனத்தின் வருவாய் 4.8 பில்லியன் டொலர்

நியுயோர்க்கை தலைமை இடமாக கொண்டு செயல் படும் சிஎ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 4.2 பில்லியன் டொலர்.

2013ஆம் ஆண்டின் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் வருவாய் 3.8 பில்லியன்டொலர். 

 

Published by

Leave a comment