திவிநெகும உற்பத்தி சந்தை எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் புதிய காத்தான்குடி பஸ்டிப்போ அருகில்

Indoor_market_zunil_guatemalaஎம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: திவிநெகும உற்பத்தி சந்தை எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் புதிய காத்தான்குடி பஸ்டிப்போ அருகில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச திவிநெகும முகாமையாளர் திரு ஈ. குணரெட்ணம் தெரிவித்தார். பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புள்ளா பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் திவிநெகும பிரதிப்பணிப்பாளர் பி குணரெட்னம் கௌரவ அதிதிகளாகவும் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

திவிநெகும உற்பத்திப்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படவுள்ள இச்சந்தையில் சந்தைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது மேற்படி சந்தையில் இனிப்புப் பொருட்கள் முறுக்குத்தீனிகள் பெட்டி பாய் பொருட்கள் தைத்த ஆடைகள் சப்பாத்து உற்பத்திகள் பயிர்க்கன்றுகள் போன்ற உற்பத்திபொருட்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன் அவை விற்பனை செய்யப்படவும் உள்ளது.

மேற்படி சந்தைக்கு அனைவரும் வருகை தந்து இச்சந்தை வெற்றிபெற பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு தலைமை திவிநெகும முகாமையாளர் குணரெட்ணம் மேலும் தெரிவித்தார்

Published by

Leave a comment