சிமாட் ஓப் ஸ்ரீ லங்கா அமைப்பினால் தலைமைத்துவமும் கால முகாமைத்துவமும் எனும் தலைப்பில் இளைஞர், யுவதிகளுக்கு இடம்பெற்ற பயிற்சி நெறியும், விருது வழங்கும் விழாவும்

unnamed (2)சாய்ந்தமருதிலிருந்து பழுலுல்லாஹ் பர்ஹான்

சாய்ந்தமருது: சிமாட் ஓப் ஸ்ரீ லங்கா அமைப்பினால் தலைமைத்துவமும் கால முகாமைத்துவமும் எனும் தலைப்பில் இளைஞர், யுவதிகளுக்கு இடம்பெற்ற பயிற்சி நெறியும், விருது வழங்கும் விழாவும் 06-04-2014 ஞாயிற்றுக்கிழமை காலை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இளைஞர் பாராளுமன்றத்தின் சகவாழ்வு பிரதியமைச்சரும், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சிமாட் ஓப் ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவருமான ஏ.எல்.எம். றிஸான் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க கலந்து கொண்டார்.

இதன் போது பிரதம அதிதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவினால் கல்வி, கலை, ஊடகம், போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதாரம், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சேவையாற்றிய அதிகாரிகள், இளைஞர்கள் விருதும், பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், தலைமைத்துவமும் கால முகாமைத்துவமும் எனும் தலைப்பில் இடம்பெற்ற பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 250 இளைஞர், யுவதிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்ஸூதீன், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ.ஏ.கபார், கொழும்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகர் பாரூக், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஏ. பஹூர்தீன் , சிமாட் ஓப் ‘லங்கா அமைப்பின் பொதுச் செயலாளர் றிஸ்கான் முஹம்மட் உட்பட கல்வியாலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர் யுவதிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment