டாக்கா: சிறப்பான ஒரு பந்து வீச்சு மூலம் விராட் கோஹ்லியை ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என இலங்கை அணியின் பதில் தலைவர் லசித் மாலிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியை சிறந்த ஒருவீரர் என்ற போதிலும் சிறப்பான ஒரு பந்துவீச்சு மூலம் சிறந்த ஒருவரை கூட ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.
தமது அணியில் ஆறு அல்லது ஏழு சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர் 20 ஓவர்களையும் சிறப்பாக வீசுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இந்திய அணியை வெற்றிகொண்டமை குறித்து அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என லசித் மாலிங்க கூறியுள்ளார். LS
Leave a comment