– SHM
சிட்னி: மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மற்றொரு கப்பலும் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளது. தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் மின்களத்தின் ( Battery) ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்கும் பணியில் கப்பல்களும், விமானங்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் விமானத் தேடலில் இருவகையாக திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல் ஹைசுன் 01 கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை சிறப்பு கருவி மூலம் நேற்று கண்டறிந்தது.
கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலி கண்டறியப்பட்ட இடத்தில் தீவிர தேடல் நடந்து வருகிறது.
சீன கப்பல் ஒலியை கண்டறிந்துள்ள நிலையில் கடலின் மற்றொரு பகுதியில் அவுஸ்திரேலிய கப்பலான HMAS ஓஷன் ஷீல் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளது.
ஒலி வந்த இரண்டு இடங்களிலும் விமானத் தேடல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரண்டு வகை ஒலிகளில் ஏதாவது ஒன்று மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியா என்பதை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.
Leave a comment