ஒரு தியாகியின் வாக்கு மூலம்

majeed mathyமதியன்பன்

இத்தனை நாளாய்

என் பணிகளை

நான்

அர்ப்பணிப்போடுதான்

ஆற்றி வருகிறேன்.

இருக்கும் இடங்களை

தேடிச் சென்று

தேவையானதை சேகரித்தபோது

பலரால்

தேவையில்லாமல் தாக்கப்பட்டிருக்கிறேன்.

ஆனாலும்

என்னைக் கொல்வதற்கு

எத்தனையோ முயற்சிகள்

எடுக்கப்படுகிறன.

எறிகணைகள் வேறு

ஏவப்படுகிறன.

சத்தியமாய்

நான் செத்த பின்புதான்

ஊருக்கள் பலர்

உருப்படியாய்

உறங்கப் போகிறார்கள்.

அறிக்கைகள்

அனுப்பிப் பார்த்தார்கள்

ஆட்களை வைத்து

அடித்துப் பார்த்தர்கள்

ஆனபலன் ஒன்றுமில்லை

இப்போது

அரசாங்கமே

குழுக்களை நியமித்து

என்னை

கொல்லப் பார்க்கிறது.

நான்

வேறுபாடு பார்க்கவில்லை

அரசியல் வாதிகளை

அநியாயக் காரர்களை

பொறுப்பில்லாத

பொதுபல சேனாக்களை

என்று எல்லோரையும்தான்..

என்பேனா முனைக்குள்

நல்லவர்களும்

நசுக்கப்படுகிறார்கள்

தப்புக்கள் சிலநேரம்

தவிர்க்க முடியாமல் போகிறது..

நான்

வரும்பாதை, தங்குமிடம்

என்குடியிருப்பு

எல்லாமே இப்போது

ஸ்கேன் செய்யப்படுகிறது..

இறைவன்

எனக்கு கொடுத்தவரம்

இதனை

எவர் எதிர்த்தாலும்

சாகும்வரை

சரிவரச் செய்து முடிப்பேன்

சாவது ஒருநாள்

உறுதி என்பதால்

சரித்திரம் வைத்துவிட்டுத்தான்

செத்துப் போவேன்

ஏனன்றால்…

…………..

…………..

நான் நுளம்பு என்பதால்…

Published by

Leave a comment