டாக்கா: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் கோஹ்லிக்கு, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து காதல் தூது வந்துள்ளது. நேற்று நடந்த 2வது அரையிறுதில் கோஹ்லியின் அதிரடியால் இந்தியா இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இந்த ஆட்டம் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
பல்வேறு போட்டியின் போதும் மைதானங்களில் ரசிகைகளிடமிருந்து விராட்டுக்கு காதல் தூது வந்த வண்ணம் உள்ளது. அதே போல் அவரின் ஆட்டம் இங்கிலாந்து மகளிர் அணியின் 22 வயதான டேனியல் யாட்யை கவர, அவர் விராட் கோஹ்லின் டுவிட்டர் பக்கத்தில் ‘Kholi marry me’ என தூது விட்டுள்ளார்.
கோஹ்லிக்கு உலகளவில் பல பெண் இரசிகைகள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment