காத்தான்குடி மத்திய கல்லூரி வரலாற்றிலும் மட்டக்களப்பு மத்தி வலயத்திலும் சாதனை

unnamedKCC Media Unit

காத்தான்குடி: இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி காத்தான்குடி மத்திய கல்லூரியில் 8 மாணவர்கள் 9 A சித்தியைப் பெற்றுள்ளனர். இது எமது கல்லூரி வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்ற முதல் சந்தர்ப்பமாகும். அத்துடன் இவ்வருடம் மட்டக்களப்பு மத்தி வலயத்திலுள்ள பாடசாலைகளில் அதிக மாணவர்கள் 9 A சித்தி பெற்ற பாடசாலை என்ற சாதனையையும் எமது பாடசாலை நிலைநாட்டியுள்ளது.

அத்துடன் 8 A சித்திகளை 5 மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். இச்சாதனைக்குரிய மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக எமது மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் A. M. அஹமட்லெப்பை, மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் M. M. இஸ்மாலெப்பை, மட்டக்களப்பு மத்தி வலய முறைசாரா கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் A. L. M. ஷரீப், காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் S. M. M. சுபைர் அவர்களும் நேற்று எமது கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் கல்லூரியின் அதிபர் கப்டன் U. L. A. முபாறக் அவர்களும் பழைய மாணவர் சங்க பிரதித் தலைவர் அல்ஹாஜ் சிப்லி பாறூக் அவர்களும் பழைய மாணவர் சங்க உறுப்பினர் Dr. M. J. M. ஜெபீன் அவர்களும் கலந்து கொண்டனர்.

unnamed

இப்பெறுபேற்றைப் பெற உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.  

எமது பாடசாலைக்கும், காத்தான்குடிக்கும் பெருமை சேர்த்துத் தந்த இம்மாணவர்களுக்கும், அவர்களின் இச்சிறந்த பெறுபேற்றிக்காக சகல வழிகளிலும் உதவிய அதிபர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள் அனைவருக்கும் ‘யுவர் காத்தான்குடி’  இணையதளமும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது.

unnamed (1)

Published by

Leave a comment