இலங்கை வெற்றி பெற்றால் ரூ.9 கோடி!

Sri-Lanka– SHM

கொழும்பு: நாளை இடம்பெறும் இருபது20 இறுதிப் போட்டியில் உலக கிண்ணத்தை கைப்பற்றினால் இலங்கை அணி வீரர்களுக்கு ரூ.9 கோடி காத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

1996ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிஇ அதன் பிறகு எந்த ஒரு பெரிய பட்டத்தையும் வென்றதில்லை. இரண்டு முறை ஒரு நாள் போட்டி உலக கிண்ண இறுதி ஆட்டத்திலும் (2007, 2011 ) இரண்டு முறை டி20 உலக கிண்ண இறுதி ஆட்டத்திலும் (2009, 2012 ) தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டம் கொழும்பில் நேற்று நடந்தது. இதில் இலங்கை அணி இருபது20 உலக கிண்ணத்தை வென்றால் அந்த அணி வீரர்களுக்கு ரூ.9 கோடி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் ரூ.3 கோடி போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய கட்டணம். மீதமுள்ள ரூ.6 கோடி போனசாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கஇ கடந்த 2011 உலகக் கிண்ணப் போட்டியின்போது வீரர்களுக்கிடையே பகிர்ந்தளிக்க ஐ.சி.சி யினால் வழங்கப்பட்ட பணம் இன்றுவரை ஒழுங்காக வழங்கப்படாமை குறித்த சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதன்காரணமாக கடந்த வருடம் இலங்கை சிரேஷ்ட வீரர்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டிருந்தமையும் ஞாபகமிருக்கலாம்.

Published by

Leave a comment