பாகிஸ்தானின் படுதோல்விக்கு தொடக்க வீரர்களே காரணம்: அப்ரிடி

afridi-S-90

இஸ்லாமாபாத்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் தோற்று வெளியேற பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள்தான் காரணம் என்று அந்த அணியின் வீரர் ஷகித் அப்ரிடி சாடியுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றுமுன் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 84 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதையடுத்து அந்த அணி நாடு திரும்பியது.

மேற்கிந்திய தீவுகளுடனான தோல்வி குறித்து கராச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னணி வீரர் அப்ரிடி,

‘முதல் 6 ஓவர்களை ஒழுங்காக எதிர்கொள்ளவில்லை. அதுதான் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது’ என்றார்.

மேலும், ‘முதல் 6 ஓவர்களில் ஆட்டம் எங்கள் கைகளில் இல்லாமல் போனதாலேயே குறிப்பிட்ட ரன்களை எட்ட முடியாமல் போனது’ எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment