‘டெங்கு நோயினை ஒழிப்பதற்கு உங்களால் தான் முடியும்’ தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

(ரைஸ்)
moh 3கிண்ணியா: நமது சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
‘டெங்கு நோயினை ஒழிப்பதற்கு உங்களால் தான் முடியும்’ எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு செயற்படுத்தும் குறித்த முன்னெடுப்பு நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோர் 44,447 ஆக இருந்த போதிலும் இது 2013 ஆம் ஆண்டு 32,060 ஆக குறைவடைந்து 30 வீதமாக வீழ்ச்சியடைந்தது. இது 2014 அதாவது இதுவரைக்கும் பதிவாகியுள்ள டெங்கு நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5193 ஆகவுள்ளது.

டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டதற்கான காரணமாக ஏப்ரல் மற்றும் யூன் மாத காலங்கள் பருவ பெயர்ச்சி மழைக் காலமாக காணப்படுவதால் அதனை கருத்திற் கொண்டு நுளம்புப் பெருக்கத்தை குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனம், தனியார் நிறுவனங்கள், சுயேட்சை அமைப்புக்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமென குறித்த பிரகடனம் விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்ட நிகழ்வு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா பிரதேச செயலாளர் கிரிஸ்நேந்திரன், சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் றிஸ்வி, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரணசிங்க, இராணுவத்தினர், கிண்ணியா நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், பிரதேச சபை செயலாளர் சுபைர் மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியில் வைத்திய அதிகாரி அலுவலகத்திலிருந்து கிண்ணியா மத்திய கல்லூரி வரையிலான விழிப்பு ஊர்வலமும் அனைவரும் சேர்ந்ததாக இடம்பெற்றது.

moh 1

moh 2

moh 3

 

Published by

Leave a comment