காத்தான்குடி: ஊழல் மோசடிகளைத் தவிர்த்து பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது நிதிகளை கையாளும் விடயத்தினை அர்த்த பூர்வமாகவும் அர்ப்பணத்துடனும் மேற்கொள்வதற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சமர்பித்த பிரேரனை காத்தான்குடி நகர சபையினால் நிராகரிக்கப்பட்டது.
கடந்த 2014.03.27ம் திகதி காத்தான்குடி நகரசபை மாதாந்த அமர்வில் நல்லாட்சிகான மக்கள் இயக்கம் பொதுச் சொத்துக்களையும் பொது நிதிகளையும் கையாளும் விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக ஒரு பிரேரணையை முன்வைத்திருந்தது. அப்பிரேரணையை ஆளும் தரப்பினர் எவ்வித நியாயமான காரணங்களுமின்றி நிராகரித்திருந்தனர்.
அப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM.ஸபீல் (நளீமி) ‘பொதுச் சொத்துக்களை அல்லது பொது நிதியினை தனிப்பட்ட இலாபம் ஈட்டும் வகையிலோ அல்லது சொந்த நலன்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை நிறைவு செய்யும் வகையிலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நகரசபை உறுப்பினர்கள் கையாளவில்லை என்றும்,இனிவரும் காலங்களிலும் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என்றும் இறைவன் மீது ஆணையிட்டுக் கூறும் சத்தியப் பிரமாணம் ஒன்றை நகரசபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும் இறையில்லத்தில் மக்களின் முன்பாகச் செய்து கொள்ள வேண்டும் என்றும், இப்பிரேரனையை நாம் நிறைவேற்றுவதன் மூலம் ஏனைய சபைகளுக்கு காத்தான்குடி நகரசபை முன்மாதிரியாக அமையும்’ கருத்துத் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்…
‘பொதுச் சொத்துக்களையும், பொது நிதியினையும் கையாளும் விடயங்களில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புக்கூறலையும்,கண்காணிப்பையும் உறுதி செய்யும் வகையில் நிதிக் குழு,கொள்வனவுக் குழு மற்றும் கேள்விச் சபைகள் என்பன உள்ளிட்ட சகல குழுக்களிலும் எதிர்கட்சி உறுப்பினர்களை மீண்டும் உள்வாங்க வேண்டும் என்றும் இதன்மூலம் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் நகரசபை நிர்வாகம் கொண்டுள்ள உறுதிப்பாடு மேலும் உத்தரவாதப்படுத்தப்படும்.’
‘காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெறுகிறது என்ற பரவலான அவதானங்களும், குற்றச்சாட்டுகளும் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டே வருகின்றன. இதுவரை செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளின் தரமும்,பயன்பாடும் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதாகவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அமைந்தும் இருக்கின்றன. இது தொடர்பான எமது அவதானங்களையும்இ கருத்துக்களையும் ஆதாரபூர்வமாக பல்வேறு நகரசபைக் கூட்டங்களிலும் நாம் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களும்,விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை உள்வாங்கி ஆராய்ந்து உண்மை நிலையினைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது பொது நிதியினையும்,பொதுச் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இதுவரை எமது பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவில்லை என்பது பெரும் துரதிஷ்டமும் குறைபாடுமாகும்.’
‘எனவே இது போன்ற ஊழல்,மோசடி மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை உடனுக்குடன் விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சுயாதீனமான பொறிமுறை ஒன்றினை நகரசபை நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதானது,நமது நகரசபையின் நம்பகத்தன்மையினையும் வெளிப்படைத்தன்மையினையும் கணிசமான அளவு மேம்படுத்தும் என்பதோடு மக்களுக்குப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றும் விடயத்தில் முழு நாட்டுக்கும் ஏற்ற முன்மாதிரியாகவும் அது அமையும்.’
‘எனவே எமது பிரதேசத்திலுள்ள பொதுச்சொத்துக்களைப் பாதுகாத்தல் என்ற விடயத்தினை இச்சபையின் மக்கள் பிரதிநிதிகளான நாம் அனைவரும் அர்த்தபூர்வமாக அமுலாக்கம் செய்து நமது நகரசபையின் நன்மதிப்பினையும் மேம்படுத்தி நம் நாட்டுக்கும் முன்மாதிரியான நடவடிக்கையாகவும் அமையும் வகையில் இந்தப் பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றுமாறு தவிசாளர்இ உதவித் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் நாம் கேட்டுக் கொள்கிறோம்’ எனவும் தெரிவித்தார்.
அத்தோடு காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் அமுல் செய்யப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களில் நடைபெற்றுள்ள மோசடிகள் மற்றும் முறைகேடுகளை நிரூபிக்கும் புகைப்படங்கள் பலவற்றையும் Pஆபுபுயின் பிரதிநிதியான அஷ்ஷெய்க் யுடுஆ.ஸபீல் (நளீமி) சபைக்கு சமர்ப்பித்து இப்பிரேரணையை அங்கீகரிக்கும்படி வாதாடினார். இருப்பினும் எவ்விதமான நியாயங்களுமின்றி காத்தான்குடி நகரசபை நிறுவாகம் அதனை நிராகரித்தமையானது வேதைனைக்குறிய விடயமாகும். அத்தோடு பொது நிதிகளைக் கையாளும் விடயத்தில் நேர்மையான நடைமுறைகளை எதிர்பார்க்கும் அத்தனைபேரையும் ஏமாற்றமடையச் செய்கின்ற ஒன்றாகவும் இது அமைந்துள்ளது.
குறித்த சபை அமர்வில் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களான ஆர்ஆ.பாக்கீர்இ அப்துல் லத்தீப்இ எம்.எஸ்.எம். ஸியாத்இ அல்ஹாஜ் றவூப் ஏ மஜீத்இ சல்மா ஹம்ஸா ஆகிய அனைவருமே ஊழல் மோசடிகளைத் தவிர்த்து பொதுமக்களுக்கு நன்மை செய்யும் இம்முக்கிய பிரேரணைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
![PMGG-Logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/pmgg-logo1.jpg?w=150&h=90)
Leave a comment